பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

63

எதிர்த்துப் புதிதாக அமைக்கப் படும் மற்றொரு நாகரிகத்தின் பிறப்பு என்பதை அவர்கள் அறிகின்றனர். ஆனால் தம் நாகரிகத்திலும் அது கீழ்த்தரமானது என்று மட்டுமே கூறிக்கொள்கின்றனர்.

அடிப்படையியல்பில் ரஷ்யப் புரட்சி சமதர்மச் சார்பானதே. அது ரஷ்யாவில் முதலாளித்துவ முறைக்குச் சாவு மணியடித்ததுடன் ஒரு சமத்துவ சமூக முறைக்கு வழி வகுத்தது. இதை முதலாளித்துவச் சார்பான பொருளியலறிஞர்களே மறுக்கவில்லை. முக்கியமாக இப்புரட்சியைக் கண்டிப்பவர்கள் கண்டனம் புரட்சியின் கண்டனமன்று, புரட்சி நடந்த வகைமுறையின் கண்டனமேயாகும்.

புரட்சிக்குப் பிந்திய கால வாழ்வில் சோவியத்து ரஷ்யா சிலபல வரலாற்றுச் சார்பான, கால தேசச் சார்பான இடையூறுகளுக்கு உள்ளாக வேண்டி வந்தது. இவற்றின் பயனாக மார்க்ஸினால் கருதப்படாதவையும் மார்க்ஸின் கருத்துக்களுடன் முற்றிலும் பொருந்தாதவையுமான, சமதர்ம முடிவுகளுக்குப் புறம்பான போக்கை ரஷ்யா மேற்கொள்ள வேண்டியதாயிற்று. எடுத்துக்காட்டாக ரஷ்யாவின் அரசியல் சர்வாதிகாரத்தன்மை மிகவும் கடுமையுடையதாகவும் பல இடங்களில் கொடுமை யுடைய தாகவும் கூட அமைந்தது. சமதர்ம முன்னேற்றம் என்பது இதுதானா என்று பலர் மலைவடையும் நிலையையும், சமதர்மம் இந்த விலைகொடுத்து வாங்கத் தக்கதுதானா என்ற நிலையையும் அது உண்டுபண்ணிற்று. இத்துறையில் அனைவரும் ஏற்கத் தக்கதொரு விளக்கம் ஏற்பட முடியாதுதான். ஆயினும் வரலாற்றுச் சார்பான எம் மாறுபாட்டையும் அதன் பயனாய் ஏற்பட்ட சமூக முறையினால் மதிப்பிட வேண்டுமே யல்லாது, அதனுடன் நடைபெற்ற பலாத்கார முறை அல்லது பலாத்கார மற்ற முறைகளினால் அதனை மதிப்பிடக்கூடாது.

முதலாவதாக,ரஷ்யப் புரட்சி அதுமாதிரியான புரட்சிகளில் முதன்முதல் புரட்சி ஆகும். அதற்கு வழிகாட்டியாயமையத்தக்க நிகழ்ச்சி முன்பு எதுவுமில்லை. ஆகவே புதிய சமூக அமைப்பை நிறுவும் முயற்சியில் ரஷ்யா விழுந்தெழுந்தது திருந்தும் பல சோதனை முறைகளைப் பின்பற்றிற்று. இத்தவறுகளைக்