பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அப்பாத்துரையம் - 46

கைப்பற்றிக் கொண்டு முதலாளித்துவச் சார்பாளர்கள் அதைக் குறை கூறினர். தவறுகளைப் பெருக்கி வலியுறுத்தி அதன் சாதனைகளைப் புறக்கணித்தனர். இரண்டாவதாக இப் புரட்சி நிகழ்ந்த நாடு தொழில் முறையில் பிற்போக்கான நாடு. ஆகவே அது மக்கள் தொகையில் இயந்திர உழைப்பு வகுப்பின் ஒரு சிறுபான்மைப் பிரிவாக மட்டுமே இருந்தது. எனவே வகுப்புச் சர்வாதிகாரமென்பது இங்கே ஒரு கட்சிச் சர்வாதிகாரமாகவே இருக்கமுடிந்தது. இதிலும் நடைமுறை மார்க்ஸ் கருதிய நடைமுறைக்கு மாறாக இருந்தது. ஏனெனில் மார்க்ஸ் கருத்துப்படி புரட்சி தொழில் வளர்ச்சியுற்ற நாடுகளில் இயந்திர உழைப்பு வகுப்பின் சர்வாதிகாரம் நிறுவப்பட்டபின்னரே நடைபெற வேண்டும்.

கடைசியாக உலகில் வேறு எப்பகுதிகளிலும் புரட்சி ஏற்படாத நிலையில் ரஷ்யப்புரட்சி ஒரு தனிப்பட்ட துண்டுபட்ட நிகழ்ச்சியாகவே இயங்கிச் செல்ல முடிந்தது. ஆகவே இதில் சில தேசியப் பண்புகள் கலந்துநின்றன. இதுவும் மார்க்ஸின் முன்னறிவிப்புக்கு மாறாயிருந்தது. ஏனெனில் ஒரு நாட்டில் சமதர்மப் புரட்சி நடந்தால் அதனைத் தொடர்ந்து அடுத்த நாட்டில் புரட்சி நடைபெறும் என்று அவர் கூறியிருந்தார். இவ் வகைகளில் ரஷ்யப் புரட்சிக்கு ஏற்பட்ட இடையூறுக ளெல்லாம் அது வரலாற்றின் ஒரு தனிப்பட்ட தற்செயல் நிகழ்ச்சி என்பதனையே பெரிதும் சார்ந்ததாகும். (அதாவது, அது திட்ட மிட்ட உலகப் புரட்சியின் ஒரு பகுதியன்று என்பதே).

ரஷ்யப்புரட்சி பற்றிய சரியான நோக்கும் மதிப்பீடும் அதன் தனி யியல்புகளை ஆராய்வதினால் பெறப்படுவதைவிட அதன் சாதனை களினாலேயே சரிவரப் பெறப்படும். அது உற்பத்திச் சாதனங்களில் தனிப்பட்டவர் உடைமை உரிமைகளை ஒழித்தது என்பதிலும், உழைப்பாளிகளே ஆட்சியாளர்களாகக்கூடிய ஒரு சமூக முறையை அமைத்தது என்பதிலும் சமதர்மத்தின் இரு அடிப்படைத் தத்துவங்கள் ரஷ்யப் புரட்சியில் வெற்றி பெற்றுள்ளன. இது மனித இனத்தின் சமூக இயல் வரலாற்றில் ஒரு நல்ல திரும்புகட்டமேயாகும்.

ரஷ்யப் புரட்சி பற்றிய நேர்மையான கண்டிப்புக்கள் பெரும்பாலும் அதன் சர்வதேசியப் பகுதி சார்ந்தவையல்ல.ரஷ்ய