பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 46

முதலாவதும் முதன்மையானதுமான விளைவு ரஷ்யாவிலே சமதர்மத்தின் எதிர்காலம் பற்றிய செய்தி இனி வெறுங் கனவல்ல, முழு அளவில் நனவு என்பதே. அது அங்கே சோதனை நிலையில்கூட இல்லை; நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே உள்ளது. இரண்டாவதாக, தேசிய முறையிலேயே ரஷ்யா பிரம்மாண்டமான சக்தி பெற்றுள்ளது; இது சர்வதேச நிலையிலும் பயன்விளைவிப்பதே. சர்வதேச அரங்கத்தில் ரஷ்யாவை ஒரு முக்கியமான அங்கமாகக் கொள்ளாமல் எந்த மாறுபாடும் இனிச் செய்யமுடியாது. இச் சக்தியின் அளவு பெருகப்பெருக, உலக சமதர்ம முன்னேற்றமும் அந்த அளவுக்குப் பெருக்க மடையும்.

வினா (36) : ஆனால் ரஷ்யாவின் ஆற்றல் வளருந்தோறும் ரஷ்ய ஆணையாளர் (கமிஸ்ஸார்) ஆட்சி உலகை ஆட்டிப் படைக்கும் என்ற அச்சமும் மக்கள் உள்ளத்தில் எழாதா?

விடை : உங்கள் சமதர்ம இயக்கம் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்பதையே அது பொறுத்திருக்கும். அது சக்தி வாய்ந்ததாயிருப்பின் ரஷ்ய ஆணையாளர் ஆட்சி என்ன, எந்த ஆட்சிதான் உங்கள்மீது ஆதிக்கம் செலுத்தமுடியும்? தம் பலவீனத்துக்காக மற்றவர்களைக் குறைகூறுதல் கோழைத்தன

மல்லவா?

எனினும் இவ்வகையில் ஒரு எச்சரிக்கை தரவேண்டும். வளரும் மரத்தின் தன்மையை வெட்டு மரத்தின் தன்மையாக எண்ணிவிடக் கூடாது. முதலாவதாக, ரஷ்ய ஆணையாளர் ஆட்சி எனப்படுவது ரஷ்ய சமதர்மத்தின் மீது மக்களுக்கு அருவருப்பை உண்டுபண்ணும் நோக்கத்துடன் முதலாளிகளால் பரப்பப்பட்ட பொய்ப்புரளியாகும். இரண்டாவ தாக, சமதர்மம் வருவது மக்கள் விருப்பத்தாலேயேயன்றி, வெளியார் சக்தியின் தூண்டுதலால் அல்ல. சமதர்மம் என்பது சமூக முறையில் மாறுதலேயன்றி அரசியல் முறையிலன்று. ரஷ்ய ஆணையாளர் செய்யக் கூடிய உச்ச ஆட்சிகூட இதற்குமேற் செல்ல மாட்டாது. மூன்றாவதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததுமான விளக்கமாவது; நாம் கவனிக்கவேண்டுவது ரஷ்யாவில் சமதர்மம் நிலவுகிறதா என்பதையே யன்றி, அங்கே ஆணை யாளர்களோ மாவட்டத் தலைவர்களோ இருக்கிறார்களா என்பதல்ல. நாம் மேற்