பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

67

காட்டியபடி ரஷ்யாவில் சமதர்மம் நிலவுகிறதானால், வரலாற்று முறைப்படியே ஆணையாளரின் முக்கியத்துவம் அங்கே வரையறுக்கப் பட்டதாகவும் புறக்கணிக்கத் தக்கதாகவுமே இருக்கும். மொத்தத்தில் ஆணையாளர்தான் அரசியல் சக்கரத்தின் ஒரு திருகாணியன்றி வேறு என்னவாய் இயங்க முடியும்.

மேலும் இங்ஙனம் ஆராய்வதில் நாம் அடிப்படைச் செய்திகளை விட்டுவிட்டுச் சிறு நுணுக்கங்களையே கவனிக்கிறோம். ரஷ்யப் புரட்சி சமதர்ம அடிப்படையில் உருவானதே. இவ்வடிப்படைச் செய்தியில் எந்த மாறுபாடும் இல்லை. இங்ஙனம் அது சமதர்மப் புரட்சியா யிருந்தால் அது உலகப் புரட்சிக்கு வழி வகுத்தே தீரவேண்டும்.

முடிவாக வற்புறுத்தவேண்டியது யாதெனில், சமதர்ம இயக்கம் எதுவும் சோவியத் ரஷ்யாவுடன் பகை வைத்துக் கொள்ள முடியாது. கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, இருக்கலாம். ஆனால் ரஷ்யாவினுள்ளேயே கருத்து வேறுபாடுகள் இல்லாமலில்லை. இவ்வேறுபாடுகளைப் பெருக்கி மிகைப்படுத்திப் பகைமைக்கான காரணங்களாக்குவது என்பது சமதர்மத்தின் குறிக்கோளையே புறக்கணிப்பது, சிறப்பாக அதன் சர்வதேச மனப்பான்மையை மறுப்பது ஆகும்.

வினா (37) : தொழிற்சங்க இயக்கம் சமதர்மத்திலிருந்து எவ்வகையில் மாறுபடுகிறது?

விடை:பலவகைகளில் உண்மையில் இவை இரண்டிற்கும் தொடர்பே கிடையாது. சமதர்மம் ஒரு முழுமை வாழ்க்கைக் கோட்பாடு. அது எல்லா வகுப்புகளுக்கும் திட்டம் அமைப்பது. அதன் குறிக்கோள் ஒரு புதிய சமூகமுறை யமைப்பை உருவாக்குவது.ஆனால் தொழிற்சங்க இயக்கத்தின் குறிக்கோள் இயந்திரத் தொழில்களிலீடுபட்ட உழைப்புத் தொழிலாளர் எல்லைக்குட்பட்டது. அது அவர்கள் நலங்களைப் பாது காப்பதற்கான அமைப்பு மட்டுமே. அதன் பிரச்சினைகள் அரசியலுடன் மோதிக்கொள்ளும் சமயத்திலன்றி, அதற்கு அரசியலுடன் யாதொரு தொடர்புமில்லை.