பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

69

அவர்கள் சங்க அமைப்புக்களும் வளர்ச்சியுற்றன. வரவர முதலாளிகளும் தனிப்பட்ட தொழிலாளர்களுடன் பேரம் செய்வதை விடச் சங்க அமைப்புக்களுடன் பேரம் செய்வது எளிது என்று உணர்ந்தனர். தொழிலாளர் சங்கங்களின் நோக்கம் அவர்கள் ஊதியத் திட்டத்தையும் நேரத் திட்டத்தையும் வேலைச் சூழ்நிலைகளையும் பாதுகாப்பதே. அவர்கள் அமைப்புக்கள் யாவும் சுரங்கத் தொழில், நெசவு, இரும்புத் தொழில் ஆகிய தனித் தனித் துறைகள் பற்றியவை யாதலால், அவை தொழிற் சங்கங்கள் எனப்பட்டன. தொழில் உடைமையாளருக்கும் அதன் தொழிலாளருக்கும் இடையே வேற்றுமை ஏற்பட்ட போதும், கூட்டு முறையில் பேரம் செய்வது திருப்தி தருவதாகவும் காலச் சிக்கன முடையதாகவும் காணப்பட்டது. பெரும்பாலான நாடுகளில் இன்று ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் கூட்டுப்பேர முறையே தொழிற் சங்க இயக்கமாகும்.

இங்ஙனம் தொழிற் சங்க இயக்கம் இயந்திர ஊழியரின் நலன்களை மட்டுமே பாதுகாப்பது ஆகும். அது முதலாளித் துவத்தை அழிப்பதையோ, புதிய சமூக முறையை உண்டுபண்ணு வதையோ குறிக்கோளாகக் கொண்ட தன்று. ஆனால் இதுவே சமதர்மத்தின் பணி ஆகும். மேலும் சமதர்மம் உழைப்பு வகுப்பே நியாயமாக முதலாளித்துவ வகுப்பினும் முன்னுரிமை யுடையதாகக் கொள்ளினும், அது குடியானவர் வகுப்பு, அறிவுவகுப்பு முதலிய எல்லா வகுப்பின் நலன்களையும் கவனிக்க வேண்டியதாகிறது.ஆகவே சமதர்மமும் தொழிற்சங்க இயக்கமும் ஒன்றுக்கொன்று நிறைவு ஆன தொடர்புடைய இயக்கங்களே யாயினும் இரு வேறு நோக்கங்களைக் கொண்ட இரு வேறு யக்கங்களே யாகும்.

வினா (39) : உழைப்புத் தொழிலாளிகள் தொழிற் சங்கங்கள் மூலம் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடுமானால் அவர்களுக்குச் சமதர்மம் ஏன் தேவைப்படுகிறது?

விடை : தொழிற் சங்கங்கள் மூலம் தொழிலாளர் எப்போதுமே தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. தொழிற் சங்கங்கள் பேரம் செய்ய முடியும். அவசியமானபோது முதலாளிகளுடன் போராடும் போராட்டத்தில் உதவவும் முடியும். ஆனால் அவர்கள் முயற்சி எப்போதும் வெற்றியில்