பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அப்பாத்துரையம் - 46

முடிவதில்லை. சில சமயங்களில் முதலாளி தன் கட்டற்ற சக்திகொண்டே அவர்களை அடக்கி விடுகிறான். சில சமயம் முதலாளிகட்கே பெருத்த இடைஞ்சல்கள் இருப்பதன் காரணமாக அவர்களால் தொழிலாளர்களைத் திருப்திப்படுத்த முடிவதில்லை. அதாவது தொழிலாளர்கள் கோரிக்கை எவ்வளவு நேர்மையாயிருந்தாலும் அவர்களால் அதனை நிறைவேற்ற முடிவதில்லை. முதலாளிகளுடன் தங்கள் தொடர்பை சரி செய்துகொள்ள மட்டுமே தொழிற் சங்கங்கள் ஒரு கருவியாய் அமைய முடியும். சமதர்மக் கட்சியே மக்களுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பைச் சரி செய்து வைக்கும் கருவியாகும்.

தொழிலாளர் வகுப்புக்கும் முதலாளித்துவ வகுப்பைப் போலவே அரசியல் துறையில் ஒரு நோக்கம் வேண்டும். இலவசக் கல்வி, மலிவான உணவு, போர்கள், வீட்டு வசதி, பேச்சுரிமை, ஆகியவை வேண்டும், வேண்டாம் என்பது பற்றியதே இந்நோக்கு. முதலாளி, இலவசத் தொடக்கக் கல்வியை நாடலாம். ஆனால் இலவச உயர்தரக் கல்வியை எதிர்க்கக்கூடும். அவர்கள் மலிவான உணவைக் கோராதிருக்கலாம். ஆனால் தொழிலாளர் அதனைக் கோருவர். போர் முதலாளிகளுக்கு நன்மையாகும். ஏனெனில் அதன் வெற்றி அவர்கட்கு இன்னும் மிகுதியான விற்பனைக் களங்களைக் கொண்டுவரும். தொழிலாளர்கட்கோ போர் அழிவுத் தன்மையுடையது. இச்செய்திகளில் தொழிற் சங்கங்களின் கருத்து ஒருமித்த முடிவுடையதாயிருக்க முடியாது. இதனாலேயே தொழிலாளர் தமக்கென அரசியல் கட்சியொன்றை வகுத்துக் கொள்கின்றனர். இது பொதுவாகச் சமதர்மக் கட்சியேயாகும்.

வினா (40) : முதலாளிகள் போக்கு எவ்வளவு பிற்போக்குடைய தானாலும், அவர்கள் எல்லையற்ற பலம் உடையவர்களாக இருப்பதை நோக்க, இச் சமதர்மக் கட்சி வெற்றிகரமானதாயிருக்க முடியுமா?

விடை : முதலாளித்துவ வகுப்பின் வலுவைக் குறைவாக மதிப்பதில் பயன் எதுவுமில்லை. முதலாளிகளுக்கு மட்டற்ற பக்கபலம் இருப்பதும் அவர்களுக்கு அரசியலின் ஆட்சி பெரும்பாலும் துணையாயிருப்பதும் உண்மையே. ஆயினும் நாம் மேலே குறிப்பிட்டதுபோல முதலாளித்துவத்தின் வலு எப்போதும் ஒருநிலைப்பட்டது அல்ல. உழைப்பு வகுப்பும் பொது மக்களும் அவர்களுக்கு எதிர்ப்பாக உள்ளனர் என்பது மட்டுமல்ல;