பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

71

அவர்களுக்குள்ளே கூடப் போட்டி எதிர்ப்பு இருக்கிறது.மேலும் நுணுகி ஆராய்ந்து பார்த்தால் முதலாளித்துவத்தின் வலு இறுதியாகத் தொழிலாளர் அவர்களுக்குத் தரும் வலுவேயாகும். எனவே தொழிலாளர் அவ்வலுவைக் குறைக்க விரும்பினால், அவர்களால் குறைக்க முடியும். சமதர்மக் கட்சி ஒவ்வொரு தறுவாயிலும் புரட்சியைக் கிளப்பிவிட முயலுவதன்று. அது முயல்வதெல்லாம் இப்போதிருக்கும் அரசியல் சாதனங்களை கூடுமானபோதெல்லாம் தன் நோக்கத்தை ஈடேற்றும் முறையில் பயன்படுத்துவதேயாகும். இது காரணமாகவேதான் அது முதலாளித்துவ நிலையங்களான அரசியல் அன்று, நகரவைகள் முதலிய பொது நிர்வாகங்களில் புகுகின்றது. ஆனால் அதன் முக்கிய நோக்கம் ஒரு சிலரேயுள்ள முதலாளித்துவ ஆட்சி யினிடமாக, பெரும்பாலரான தொழிலாளரின் ஆட்சியை நிறுவுவதேயாகும். இதைப் புரட்சி மூலம் நிறைவேற்றிக் கொள்வதா அல்லது அரசியல் மன்ற முறையில் பெரும்பான்மை யாதிக்கத்தினுதவியால் நிறைவேற்றிக்கொள்வதா என்பது எத்தகைய கண்டிப்பான கோட்பாட்டமைதியையும் பொறுத்த தன்று; சூழ் நிலைகளையும் நி நிலையை லைமைகளையும் மட்டும்

பொறுத்தது.

வினா (41) : தொழிலாளர்களையும் அவர்கள் சங்க அமைப்புக் களையும் விட முதலாளித்துவ அரசியல்களிடமுன்பே படைகளும் காவலர் படை(போலீஸ்)களும் எத்தனையோ மடங்கு மடங்கு வலுவுடையவையா

யிருக்கையில் இது எவ்வாறு முடியக்கூடும்?

விடை:மேலீடாகக் காண்பதுபோல நம் வேகம் அவ்வளவு எளிதானதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சென்ற 25 ஆண்டு வரலாறே இதற்குச் சான்றாகும். தொழிலாளர் கூட்டுமுறையில் எதிர்த்து நின்று பொது வேலைநிறுத்த அறிவிப்புச் செய்து வேலை செய்ய மறுத்துவிட்டால் முதலாளித்துவம் நொறுங்கி வீழ்ச்சியடைந்து விடும் என்று தொடக்க நாட்களில் நம்பப்பட்டது. (கார்ல் மார்க்ஸ் கூட தனை நூற்றுக்கு நூறு நம்பியவர்களில் ஒருவரே) ‘இதனால் தொழிற்சான சாலைகளிலிருந்து சரக்குகள் வராததுடன், புகை வண்டிகளும் பிற போக்குவரத்து வசதிகளும் இதனால் நிறுத்தப் பட்டுவிடும்! காவல் துறையும் படைக் கலந்தாங்கிய படை வீரரும் செயலற்றுப் பயனழிந்து போவர்!' என்று கருதப்பட்டது. இவை