பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

|--

அப்பாத்துரையம் - 46

அனைத்தும் கோட்பாட்டளவில் சரியே. ஆனால் செயலளவில் இதே முறையில் எதுவும் நடைபெறுவ தில்லை. ஏனெனில் நூற்றுக்கு நூறு என்ற அளவில் வேலை நிறுத்தம் என்பது நடைபெற முடியாத ஒன்று. ஆகவே லெனின் மார்க்ஸைப் பொதுவாகப் பின்பற்றினும் ஒரு திருத்தம் செய்துகொண்டார். இப்போராட்டத்தை முற்ற முடிக்க வேண்டுமானால் உழைப்பு வகுப்பின் தலைமையில் பொது மக்கள் போர்க்கருவி தாங்கிய கிளர்ச்சி ஒன்று தொடங்கி அரசியல் சாதனங்களைக் கைப்பற்றவேண்டும் என்றும் இவ்வழியில் மட்டுமே சமதர்ம அரசியல் உருவாக முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும் முதலாளித்துவ முறையில் இன்னொரு பொறித் தடத்தையும் லெனின் கண்டு பயன்படுத்தினார். இது இதுவரை கவனிக்கப்படாதிருந்த தொன்று.காவற்படையும் போர்ப்படையும் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டவை யாயினும் உண்மையில் குடியானவர்களிடையிலிருந்தும் தொழிலாளர் களிடையிலிருந்தும் திரட்டப்பட்டவையே அவர்களும் உழைப்பூதியம் பெறுபவர்களே; அவர்கள் நலங்கள் உழைப்பாளர்கள் நலங்களுடனொத்தவையே. ஆகவே படை வீரர்களும் மக்கள் கிளர்ச்சியின் போது பொதுமக்கள் சார்பாகவே நிற்பர் என்று கொள்ளப் போதிய சாதக நிலை இருக்கவே செய்தது.

வினா (42) : அரசியல் மன்றங்கள் இன்ப வாழ்க்கை வகுப்பினரே தோற்றுவித்ததாயினும் மக்களின் மொழியுரிமையாலேயே தேர்வுபெறப் படுகின்றன வாதலால், சமதர்ம கட்சி அவற்றில் பெரும்பான்மையிடம் பெற்றுச் சமதர்மச் சட்டங்களை ஏன் கொண்டுவரப்படாது?

விடை : ஒவ்வொரு சமதர்மக் கட்சியும் செய்ய முயன்று வருவது இதுவே. ஆனால் இதுவும் கோட்பாட்டளவில் சரியே தவிர நடைமுறைச் சோதனையில் எப்போதும் வெற்றி பெறுவதில்லை. அரசியல் மன்றில் புகும் ஒவ்வொருவரும் நிலைபெற்றுள்ள அரசியலுக்கு அதாவது முதலாளித்துவ அரசியலுக்கு உண்மையுடையவனாயிருப்பதாக உறுதி எடுக்கவேண்டும். எனவே அதை அழிக்காதிருக்க அவன் உறுதிமொழி கொடுப்பவனாகிறான். இரண்டாவதாக, தேர்தல்களில் எல்லாரும் மொழியளிப்பதுமில்லை; அளிக்க