பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

73

முடியவும் செய்யாது.மொழியளிக்க முடியாத வகையில் மக்கள் வேலையிலீடு பட்டிருக்கலாம் களைத்துப் போயிருக்கலாம்; அதுபற்றித் தொந்தரவு எடுத்துக் கொள்ளவிரும்பாது அசட்டையாயிருக்கலாம். தேர்தல்களுக்கு மிகவும் செலவு பிடிக்கும். இதில் முதலாளிகளுக்குச் சமதர்மிகளுக்கு இருப்பதை விட என்றும் நிலைமை சாதகமாகவே இருக்கும்.

ஆயினும் அரசியல் மன்றில் பெரும்பான்மை பெறுவது ஒருநாளும் முடியாத காரியம் என்று கூற இயலாத ஒரு சில நாடுகளில் சமதர்மிகள் பெரும்பான்மையிடம் பெற்றுள்ளார்கள். ஆனால் சில சில ஆண்டுகளுக்கொரு முறை பொதுத்தேர்தல் நடைபெறுவதால் இப் பெரும்பான்மை நிலைபேறுடையதன்று. இது மட்டுமன்றிச் சில இடங்களில் சமதர்ம ஆட்பேர்கள் பெரும்பான்மை யிடங்கள் பெற்றுப் பதவி பெற்றபின் முதலாளி வகுப்பு கிளர்ச்சி செய்து அரசியலைப் பலாத்காரத்தினுதவியால் வீழ்த்தி முறியடித்ததுண்டு. இது ஸ்பெயினில் நடைபெற்றது. ஸ்பானிய முதலாளிகள் ஒரு கிளர்ச்சியை உருவாக்கி வெற்றி கரமாக ஒரு உள்நாட்டுப் போரை எழுப்பிச் சட்டப்படியமைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலை வீழ்த்தினர். இத்துடன்,ஆட்சி யமைப்பே முதலாளித்துவத்திற்குச் சாதகமாயிருக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டு நீண்ட காலம் நடைபெற்றுவருவதனால், அதன் பணியாளர்கள் புதிய அமைப்பான சமதர்மத்தினிடம் பற்றில் லாமல் அதன் வேலையை அழிக்கும் எண்ணமுடையவர் களாகவே உள்ளனர்.

இன்ப வகுப்பினரின் அரசியல் மன்றைச் சமதர்ம நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் வகையில் உள்ள நடைமுறை இடையூறுகளில் இவை சில. ஆனால் பணியை மிகவும் கடினமாக்கும் அடிப்படைச் சிக்கல் யாதெனில், முதலாளித்துவங் காரணமான நெருக்கடிகளில் துன்ப நிலைமைகள் மிகவும் மோசமாகவும் தீர்க்க முடியாத சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருப்பதால் இடர் நீக்கும் உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டி இருக்கிறது. தேர்தல்களும் மன்ற நடவடிக்கைகளும் சிக்கல் மிகுந்த வேலை முறைகளுடையவை. அவை அமைதிகால உழைப்புக் குரியனவே யன்றி நெருக்கடி செயல்களுக் கேற்றவை யல்ல. ஆகவே நெருக்கடி காலங்களில் அவை முட்டுப்பாடு