பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் - 46

உடையவையாகவும் போதாவையாகவும் இருக்கின்றன.

வினா (43) : புரட்சி என்பது முற்றிலும் இன்றியமையாதபடி அவசியமா?

விடை : முற்றிலும் இன்றியமையா அவசியமுடையதும் அல்ல; விரும்பத்தகுந்ததுகூட அல்ல. ஆயினும் அதனை எப்போதும் விலக்கிவிட முடியாது.

வினா (44) : சமதர்மத்தை நனவாக்க மக்கள் யாது செய்தல் வேண்டும்? உடனடியாக, நடைமுறைவகையில் அதில் என்னென்ன முறைகள் எடுக்கப்படல் வேண்டும்?

விடை : தொழிற் சங்கங்கள் (வரையறைக்குட்பட்ட ஆற்றல் எல்லையுடையவையே யாயினும்) வசப்படுத்தப்படல் வேண்டும்; சமதர்மக் கட்சியின் சக்தியைப் பெருக்க வேண்டும்; அதன் குறிக்கோள் என்ன, யாது செய்தல் வேண்டும் என்பவற்றைப் பரப்ப அதாவது கொள்கைப் பிரசாரம் செய்ய வேண்டும். தற்போதைய முதலாளித்துவ அரசியலினிடமாகச் சமதர்ம அரசியல் நிறுவதற்கேற்றபடி மக்கள் மனப்பான்மையை மாற்றியமைக்க வேண்டும்.

வினா (45) : கடவுள், மதம் ஆகியவற்றை பற்றிச் சமதர்மத்தின் நோக்கு யாது?

விடை : சமதர்மம் பகுத்தறிவுக் கொத்த ஒரு வாழ்க்கைக் கோட்பாடு,பகுத்தறிவு மூலம் விளக்கப்பட்டிருக்கும் செய்திகளை மட்டுமே அது ஏற்கிறது. அந்தக் காரணத்தாலேயே அது கடவுள் உண்டு என்ற கொள்கையை ஏற்க முடியாதிருக்கிறது. ஏனெனில் நாம் மேலே காட்டியுள்ளபடி அது மனிதன் கற்பனையினால் உருவாகிய ஒரு கற்பனைக் கருத்தேயாகும். மனிதனின் பழங்கால வரலாற்றில் அவன் அறிவு எல்லை குறுகியதாயிருந்தது. தொழில்துறை வளர்ச்சியும் விஞ்ஞான முன்னேற்றமும் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலை இயற்கை முதற் பொருள்கள் (ஐம்பெரும் பூதங்கள்) அடக்கமுடியாத ஆற்றல் வாய்ந்தவையாயும் மனிதனால் வசப்படுத்த முடியாதவை யாயும் இருந்தன. ஆக அவன் அம்முதற்பொருள்களினும் ஆற்றலுடைய தாக தன் மனத்திலேயே ஒரு பொருளைக் கற்பித்துக் கொண்டான். உதவியற்ற இடர்நிலைக் காலங்களில் அவன் அக்