பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

75

கற்பனைப்பொருள்களின் உதவியை வேண்டி இறைஞ்சலானான். முழு அறிவும் முழுப்பரப்பும் உடைய இக் கற்பனைச் சக்தியே கடவுள் எனப் பெயர்பெற்றது.

மனித வரலாற்றில் முதன்முதல் அறியப்பட்ட ‘கடவுள்' முதலையே யாகும். நீல ஆற்றின் இடைக்குறை நிலத்தவர்கள் அதனையே வணங்கினர். நீல ஆற்றின் கரை நிலமே உலகில் முதன்முதல் மக்கள் வாழ்ந்த நிலமென்று கருதப்படுவதும் இங்கே கவனிக்கத்தக்கது. அதன் கரையில் வண்டல் பேரளவில் படிந்து நிலத்தை வளப்படுத்திற்று. அதில் உணவுப் பயிர்கள் தாமாகவே வளர்ச்சியடைந்தன. மிகப் பெருந்தொகை மக்கட் குடியிருப்புக்கள் அதில் குவிவுற்று வாழ்ந்து அதைத் தம் தாயகமாக்கின.

குடியமைப்பு உண்டுபண்ணியபின் மனிதன் பல காரியங்களை முன்னிட்டும் அடிக்கடி ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. இச்சமயங் களில் ஆறுகளிலுள்ள முதலைகள் உயிருக்கு இடையூறாயிருந்தன. தொடக்கத்தில் மனிதர் நீந்திச் சென்றனர். ஆனால் இது இடைஞ்ச லுடையதாகவும் அடிக்கடி உயிருக்கு இடையூறு விளைப்பதாகவும் இருந்தது. அவர்கள் மரக்கட்டைகளின்மீது மிதக்கவும் அதன் பின்னர் அதைத் தோண்டிப் படகுகளாக்கவும் தலைப்பட்டனர். இப்படகுகளை யும் முதலைகள் தாக்குவதுண்டு. ஆகவே அவர்கள் படகு முகப்பில் இறந்த முதலையின் தலையைப் பொருத்தி அதன் பக்கங்களை முதலைத் தோல்கொண்டு போர்த்தினர். இதன் கருத்து யாதெனில், முதலைகள் அதனையும் ஒரு முதலையென்று கருதித் துன்பம் செய்யாதிருக்கும் என்பதே.

படிப்படியாக முதலையின் மெய்யான தலைக்குப்பகரம் மரத்திலேயே முதலையின் தலையின் உருவம் செதுக்கப்பட்டது. இதுவே மனிதன் முதற் கடவுளாய் அவன் வணக்க வழிபாட்டுக் குரியதாயிற்று. இதன் பின் மனிதன் உடல் நலத்துக்கும் அவன் பயிர்வளத்துக்கும் ஆதாரமாகக் கதிரவன் வணங்கப்பட்டான். இதன்பின் மழையும் நெருப்பும் காற்றும் வணக்கப் பொருள் களாயின. இறுதியாக அவன் அஞ்சிய பொருள்கள் யாவும், பெருநோய்கள் உட்பட, அவன் தெய்வங்கள் ஆயின.