பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம் - 46

நாளாவட்டத்தில் மனிதன் அறிவுநிலை பெருகுந் தோறும் இப்பொருள்களும் முதற்பொருள்களும் பற்றிய அச்சமும் தணிந்தது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் முறைகளை அவன் அறியுந்தோறும் கதிரவன், மழை, காற்று, நோய்கள் ஆகியவைபற்றிய அச்சமும் குறைந்து வந்தது. அதன்பின் இவை கடவுள்களாக ஏற்படுவதும் நின்றுவிட்டது.

வினா (46) : இவையனைத்தும் சரியே; இன்று எவரும் முதலையையோ கதிரவனையே வணங்குவதில்லை. ஆயினும் உலகை ஆட்டிப்படைக்கும் கண்காணாப் பேராற்றல் ஒன்று இல்லையா? இவ்வுலகப் படைப்பு யாரால் ஆனது?

விடை: உலகப் பொருள்கள் எப்படித் தோன்றின என்பது பற்றிய முழுநிறைவு வாய்ந்த விஞ்ஞான விளக்கம் உள்ளது. அவை எதனிலும் உள்ளீடாக எவர் கையாற்றலையும் காணவில்லை. இயற்கையின் செயலையும் உயிர்களின் செயலையும் தவிர்த்து நடைபெறும் நடப்புக்கள் யாவும் மனிதன் வேலையேயாகும். ஆயினும் கடவுள் நம்பிக்கையைச் சமதர்மம் தண்டனைக்குரிய ஒரு குற்றமாக்கிவிட வில்லை. இவ்வாசகத்தில் நம்பிக்கை என்ற சொல்லைக் கீழ்க்கோடிட்டு வற்புறுத்திக் கொள்ளும்படி கோருகிறேன். ஏனெனில் அது ஓர் இயற்கை உணர்ச்சியேயன்றிப் பகுத்தறிவாராய்ச்சிக்கோ தர்க்கத்திற்கோ நிலை நிற்பதன்று.

வினா (47) கோடிக்கணக்கான மக்கள் மதத்தைப் பின்பற்றிக் கடவுள் இருப்பதுபற்றி நம்பிக்கை உடையவராயுள்ளனர். இத்தனைபேர் நம்பும்போது அதில் உண்மை இருக்க முடியாதா?

விடை: முதலாவது, கோடிக்கணக்கானவர் நம்புகிறார்கள் என்பதனால் மட்டுமே ஒரு செய்தி உண்மையாய்விட வேண்டும் என்ற கட்டாயமில்லை. கதிரவன் உலகைச் சுற்றிச் செல்கிறான் என்று மக்கள் நம்பிய காலம் ஒன்றிருந்தது. உண்மை இதற்கு நேர்மாறானதென்று விஞ்ஞானம் கண்டுகொண்டுள்ளது. அது போலவே அறிவுநிலை இன்னும் ஏற்படாத அளவில், இல்லாத ஒரு பொருளை இருப்பதாக அவர்கள் நம்பினர். இரண்டாவ தாகச் சமயத்துக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு இயற்கை யானதன்று; மிகச் செயற்கையானது. கடவுளிருப்பதென்பது ஒரு நம்பிக்கை. ஆனால் மதமோ மக்கள் பின்பற்றுவதற்கான ஒரு வாழ்க்கை நெறி. இம்முறையிலேயே மதம் என்பது உண்மை