பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

77

யானது. மதம் கடவுள் உதவி கோருகின்றது என்பது உண்மையே. ஆயினும் மதத்தின் பெரும்பகுதி 'நீ இது செய்க, நீ இது செய்யாதிருப்பாயாக' என்ற நீதிகள் அடங்கியதே.

வினா (48) : நீங்கள் கூறுகிறபடி மதம் அறிவாதார மற்றதென்றால், மனிதன் அக்கருத்துக்களை எப்படி ஏற்றான்?

விடை : நம் சமுதாய வாழ்வில் உள்ளீடாகத் தொக்கி நிற்கும் அரசியல் சார்பான, அதாவது சமூக, பொருளியல் சார்பான தத்துவங்களை மக்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியாத காலம் ஒன்றிருந்தது. இன்று அரசியல் கோட்பாடுகள் தரும் அதே உதவியை அன்று மதம் மனிதனுக்குத் தந்தது. அதாவது சில அடிப்படைச் செய்திகளையும் சில சமூக நடைமுறை விதிகளையும் அது வகுத்தது. இந்து மதத்தை எடுத்துக்காட்டாகக் கொள்ளுவோம். ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது இங்கே திராவிடர் அதன் முதற்குடிகளாக வாழ்ந்துவந்தனர். திராவிடர்கள் தமக்கெனத் தனிவழி பாட்டு முறைகளையும் தனிப்பட்ட சமூக அமைப்பையும் உடையவரா யிருந்தனர். ஆரியர் இத் திராவிடர் மீது போர் தொடுத்துத் தாக்கி அவர்களை வென்றனர். ஆனால் வெற்றி பெற்றவர்கள் மீது திராவிடர்கள் உள்ளத்தில் தோய்ந்து கிடந்த உள்ளார்ந்த வெறுப்பை அகற்றுவது எங்ஙனம்? ஆகவே இந்துக்களான ஆரியர்கள் தம் மதத்தை அவர்கள் மீது வலியுறுத்தி ஏற்றினர். இங்ஙனம் பலாத்காரமாக அவர்கள் திராவிடர்களைத் தம் சமூகத்தில் ஒரு பகுதியாக்கினர். கிறிஸ்தவ மதத்தின் வரலாறு இதுபோன்றதே. இயேசு கிறிஸ்து அதனைத் தோற்றுவித்தார் என்பது உண்மையேயாயினும் ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து உரோமப் பேரரசு அதனைத் தன் அரசியல் சமயமாக ஏற்றுக் கொண்ட பின்பு அது பரவத் தொடங்கிற்று. உரோமகர் பிற நாடுகளை வென்று ஒரு பேரரசை அமைத்துக் கொண்டிருந்தனர். எல்லாப் போர்வெற்றியாளரையும் போல அவர்களுக்கும் தம் போர்வெற்றிகளுக்கான ஒழுக்கமுறை விளக்கக் காரணம் என்று தேவைப்பட்டது. தங்கள் படைவீரர்களின் பற்றைக்காக்கவும், வெல்லப்பட்டமக்கள் வெற்றியாளரின் ஆட்சி தம் நலத்திற்காகவே ஒன்று நம்பவும் இது வேண்டப்பட்டது. உரோமகர் கிறிஸ்து