பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் - 46

மதத்தைப் பரப்பியது வாள் கொண்டுதான் -புரோகிதர்கள், தியாக முனிவர்கள் உதவியாலல்ல. வாளால் வெற்றியடைந்தபின் அதன் ஆட்சியை வலியுறுத்தும் அமைப்பின் ஒரு பகுதியாக வருவிக்கப் பட்டவர்களே மேற் குறிப்பிட்ட புரோகிதர்களும் தியாக முனிவர்களும் உரோமகப் பேரரசின் நலிவுடன் கிறிஸ்து மதத்தின் வாள் வெற்றியும் சிறிது மங்கலுற்றது. பல நூற்றாண்டுகளின் பின் ஸ்பானியர்கள் மீண்டும் சிலுவைக்குப் புத்துயிர் தந்து தம் பேரரசையும் பெருக்கினர். இஸ்லாத்தின் கதையும் இது போன்றதே. அது 1,200 ஆண்டுகட்குமுன் அரேபியாவில் தோன்றிற்று. அது யூதர்களின் அட்டூழியங் களுக்கும் சுரண்டல் வட்டி முறை வழக்கங்களுக்கும் எதிராக எழுந்தது. ஆயினும் அதனைத் தோற்றுவித்த தலைவர் முகம்மதுநபி தம் ஒழுக்க முறையைப் போதித்ததுடனன்றி அதைப் பரப்பக் கருவியாக வாளுக்கும் ஆதரவு காட்டினர். ஆயினும் பாரசீக, எகிப்தியப் பகுதிமக்கள் அதனை ஏற்ற பின்பே உண்மையில் இஸ்லாம் நடுக்கிழக்கு உலகின் ஒரு சக்தியாய் விளங்கியதுடன் அட்லாண்டிக் வரை பரவவும் முடிந்தது. இங்ஙனமான மனிதனின் வரலாற்றில் அக்காலத்தில் மதம் ஓர் அரசியல் வாழ்க்கைக் கோட்பாடாகவே இயங்கிற்று என்பதைக்

காணலாம்.

கடவுள் கொள்கையுடன் தொடர்பில்லாமல் நடைபெறும் சமயம் எதுவும் இல்லை. மதம் கடவுளின் உதவியை இரண்டு நோக்கங்களுடன் கோரவேண்டியதாயிற்று. முதலாவது இயற்கையிற் கண்ட பல பொருள்களுக்கு விஞ்ஞானம் அன்று விளக்கங்கள் காணவில்லை. ஆகவே பகுத்தறிவு முறையில் விளக்கப்படாதவை யனைத்தும் கேள்வி முறைக்கு அப்பாற்பட்ட கடவுள் என்ற தனிப்பெரும் சக்தியின் பேரால் நம்பப்பட வேண்டுமென்று கோரப்பட்டது. இரண்டாவது அது சமூகத் தொடர்புடைய கோட்பாடாதலால் அதன் விதிகள் எவராலும் எக்காரணத்தாலும் மீறக் கூடாதவை என்று வலியுறுத்தப்பட வேண்டியிருந்தது. அவற்றைத் தனிப்பட்டாயினும் கூட்டாக வாயினும் நம்ப மறுத்தவர்கள் நாஸ்திகர்கள், சமய விரோதிகள் எனப் பழித் தொதுக்கப்பட்டுத் தண்டனைகளுக்கும் வதைக்கும் ஆளாக்கப்பட்டனர். இடைப்பட்ட காலங்களில் (புராண