பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

79

காலங்களில்) நடைபெற்ற போர்களெல்லாம் மதங் காரணமாகவோ மதங்களுக்கிடையிலோ நடைபெற்றவையே யாகும்.

இன்று நிலைமை வேறுபட்டுள்ளதாயினும் ஒரு சிறிதே மாறுபட்டுள்ளது என்னலாம். போர்கள் எழும்போது இன்னும் நாடுகள் கடவுள் உதவியைக் கோரவே செய்கின்றன. வகுப்புப் போர்கள் மதம் தோன்றியபின்பே தோன்றின என்பதும் மிகையாகாது.

வினா (49): கடவுளிடத்தில் மெய்யாகவே பக்தி கொண்டவர்க ளாகவும் பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் எண்ணம் ஒரு சிறிது மில்லாதவர்களாகவும் உள்ளவர்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

விடை : கடவுளிடத்தில் மெய்யாகப் பக்திகொண்டவர் களாய், ஆனால் பலாத்காரத்தின் மூலம் தம் நம்பிக்கையைப் பிறர்மீது சுமத்த விரும்பாத வர்களாயுள்ளவர்கள் எத்தகைய இடையூறுமின்றி அங்ஙனமே வாழலாம். சமதர்ம ஆட்சியில் நம்பிக்கைச் சுதந்தரம் தாராளமாக இருக்கும். ஆனால், சமதர்மம் ஏற்க ஒத்துக்கொள்ளாதது அரசியலின் மீது மதம் தன் செல்வாக்கைப் பயன்படுத்துவதே. மதம் நாம் மேலே கண்டுள்ளபடி அரசியலில் பெரும்பங்கு கொண்டிருப்பதுடன் பெருந் தீங்குகளும் விளைவித்துள்ளது. நல்ல சமூக அமைப்பு முறைக்கும் மனிதவகுப்பின் நட்பமைதிக்கும், இத்தகைய சமூக நலத்துக்கு மாறான சீரற்ற கூட்டுறவு ஒழிக்கப்பட வேண்டும். நடைமுறையில் சமதர்மம் இதுவகையில் முற்றிலும் நடுநிலையில் நிற்கும். அதாவது எந்தத் தனி மனிதனுக்கோ குழுவுக்கோ ஒரு குறிப்பிட்ட ட மத நம்பிக்கை காரணமாகத் தனிச் சிறப்புரிமையும் தரப்படமாட்டாது. தனிப்பட்ட குறைபாடுகளும் சுமத்தப்பட

மாட்டா.

,

வினா (50) முதலாளித்துவம், மதம் முதலியவற்றுக் கெதிராக நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள். அவற்றின் பிற்போக்குத் தன்மையையும் காண்பித்துவிட்டீர்கள். இனி, சமதர்மம் எப்படி ஒழுங்கமைத்தாளும் என்பதையும், அது இப்போதுள்ளதைவிட எவ்வாறு மேற்பட்டதாயிருக்கு மென்பதையும் தெரிவிப்பீர்களா?

விடை : இக்கேள்வி அவ்வளவு சரியாகக் கேட்கப்பட வில்லை. நான் இன்றிருக்கும் சமூக அமைப்பு முறையின் பிற்போக்குத் தன்மையைக் காட்டியது மட்டுமன்றி, அதே சமயம்