பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




||-_ _-

அப்பாத்துரையம் - 46

80 சமதர்மம் அத்தறுவாய்களில் என்ன செய்யும் என்பதையும் விளக்க முயன்றேயுள்ளேன். ஆயினும் சமதர்மத்தைப்பற்றி இதுகாறும் சொன்னதில் பெரும்பகுதி அதன் கோட்பாடும் அறிவுத்துறை அமைதியும் பற்றியதே. சமதர்ம அரசியல் பற்றிய திட்டவட்டமான விளக்கம் வகுக்கவில்லை என்பது உண்மையே.

முதலாளித்துவம் நில உடைமை முறையை வென்று தன் முழுநிறை தனியாட்சியை நிறுவிற்றென்று கண்டோம். இன்று நில உடைமைமுறை கிட்டத்தட்ட முற்றிலும் மறைந்துவிட்டது. எங்கேனும் அது இருந்தால் முதலாளித்துவத்தின் இணக்கத்தின் மீதும் தயவின் மீதுமே -அதுவும் வெளி வடிவ அளவில் மட்டுமே இருக்கிறது. சோவியத் ரஷ்யா நீங்கலாக இன்று எல்லா நாடுகளிலும் அரசியல் முதலாளித்துவத்தின் சக்திக்குத் தலை வணங்குகிறது.தொடக்கக் காலங்களில் நில உடைமைமுறையை ஒழிப்பதில் மக்களே முதலாளித்துவத்துக்கு ஆதரவு தந்தனர். இது ஏனெனில், முதலாளித்துவம் அடிமை முறையைச் சட்ட விரோதமாக்கியதுடன், ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டின் மீதன்றித் தம்மிச்சையாகத் தம் உழைப்பினால் வந்த பொருளைச் சிறிய அளவிலேனும் விற்கும் உரிமையைத் தந்தது. அதுமட்டுமன்றி அது அவனுக்கு அல்லது அவளுக்குத் தனக்குப் பிடித்த தொழிலையும் அதற்குக் கிடைக்கும் ஊதியத்தையும் தேர்ந்துகொள்ளும் உரிமையையும் அளித்தது. நாகரிகத்தில் முன்னேறியுள்ள முதலாளித்துவ நாடுகளில் ஒவ்வொரு நாட்டு மகனும் மகளும் மொழியுரிமை பெற்று அரசியலை நடத்தும் உரிமையில் ஒரு பங்கு பெற்றுள்ளனர். இது மக்களுக்கு மன நிறைவு தருவது இயல்பே. ஆயினும் இந் நற்பேறு பெற்றவர்கள் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளின் மக்களே; குடியேற்ற நாடுகளின் மக்களல்ல. ஏனெனில் இவர்களுக்கு இவை தடை செய்யப்பட்டு அவர்கள் நிலை முன்னிலும் மோசமாயிற்று. முதலாளித்துவ நாடுகளில் நாளடைவில் இலவசக் கல்வியும் கிடைத்தது. ஏனெனில் தொழில் சரிவர நன்கு நடைபெற அடிப்படைக் கல்வி மிகவும் அவசிய மாயிற்று. தவிர, வயது வந்தவர் மொழியுரிமை, இலவசக் கல்வி முதலிய உரிமைகளும் ஏற்பட்டுள்ளனவாயினும் இவை சென்ற முப்பது நாற்பது

ஆண்டுகட்கு உட்பட்டவையே.