பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

81

ஆனால் முதலாளித்துவத்தின் முன்னேற்ற மனப்பான்மை அல்லது சமரச மனப்பான்மை (Liberalism) பல செய்திகளால் தடைப்பட்டது. முதலாவதாக உலகில் முதலாளித்துவ நாடுகள் ஒன்றல்ல, பல. அவர்களிடையே இருந்த பொறாமைகளால் போர்கள் ஏற்பட்டன. போர்கள் உற்பத்தியைத் தடுத்து நிறுத்தி முட்டுப்பாட்டைஉண்டுபண்ணின.இரண்டாவதாகமுதலாளித்துவம்

சுரண்டலை அடிப்படையாகக் கொண்டதாதலால் அது சில நாடுகளில் மெதுவாகவும் சில நாடுகளில் விரைவாகவும் வறுமையைப் பரப்பியது. அதாவது சமரச வளர்ச்சியுடன் மக்களுக்குச் சலுகைகள் அளிப்பதற்கு மாறாக, அது பின்னடைந்து சென்றது. முன்னர்த் தரப்பட்ட சில சலுகைகள் பின்வாங்கப் பட்டதுடன் நில்லாது, அவற்றினிட மாகப் பாசிசம் என்ற புதுமுறை வல்லாட்சி ஏற்பட்டு மக்களை மீண்டும் அடிமைத் தனத்துக்கு நிகரான நிலைக்குக் கொண்டு சென்றது.

இதனை முற்போக்குக்காட்டி நடத்தப்பெறும் முற்போக் கெதிர்ப்பு இயக்கம் என்னலாம்.

இவ் எதிர்ப்பியக்கத்தில், தொழிற் சங்க இயக்கம் சட்ட விரோத மாக்கப்பட்டது. வேலை நேரம் தம் மனம் போன வாக்கில் வரையறுக்கப் பட்டது. ஒருவர் தம் வேலையையோ, தாம் வேலைசெய்யும் இடத்தையோ தெரிந்தெடுத்துக் கொள்ளும் உரிமையோ கூட மறுக்கப்பட்டது. அத்துடன் கருத்துக்களைத் தாராளமாய் வெளியிடும் உரிமை, சங்கமாகச் சேரும் உரிமை ஆகியவையும் போயின. சுருக்கமாக மனிதர்களனைவரும் முதலாளித்துவத்தின் சார்பாக, அரசியலால் இயக்கப்பட்ட வெறும் கருவியாயினர். முதலாளித்துவத்தின் போக்கு இதுவாதலால், அது நிறுத்தப்படல் வேண்டும். அது உலகின் உற்பத்திச் சக்திக்கும் மக்கள் நலத்துக்கும் எதிரான இடையூறு களின் ஊற்றாகிவிட்டது. அது தொடர்ந்து நிலைபெறுவதானால் மனித வகுப்பின் ஆற்றலும் முன்னேற்றமும் சீரழிந்துவிடவே செய்யும்.

ஒரு சமதர்ம அரசியலின் முதல் வேலை விஞ்ஞானத்தி னுதவியுடன் உலக நாட்டு மக்களின் உற்பத்திச் சக்தியை மீட்டு முன்னிலைக்குக் கொண்டு வருவதும் பெருக்குவதும், இவ்வுற்பத்திப் பொருள்கள் மக்களிடையே நேர்மையுடன்