பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

அப்பாத்துரையம் - 5

பக்கம் அரசரைக் கண்டு அன்புகொள்ள வந்த அந்நிய நாட்டுத் தூதுவர் கூட்டம் காத்திருக்கும். மாகாணத் தலைவர்கள் அனுப்பிய தூதரும், அரசாங்க உயர் அலுவலாளரும் அரசியல் செய்திகளைச் சொல்ல ஒரு பக்கம் காத்திருப்பர். துங்கபத்திரை முதல் குமரி முனைவரை இருந்த சிற்றரசர் விடுத்த தூதுவர் ஒரு பக்கம் காத்திருப்பர்.

விஜயநகரப் பேரரசர்

இங்ஙனம் பலவகையாலும் சிறப்புற்று விளங்கிய விஜய நகரத்தைத் தலைநகராகக் கொண்ட அரசர்கள் தங்கள் வாள் வன்மையாலும், படை வன்மையாலும் தென் இந்தியா முழுவதையும் வென்று ஆண்டு வந்தனர். அவர்கட்கு 'மஹாராயர், மஹாராயலு' என்ற பட்டப் பெயர்கள் வழங்கின. அவர்கள் கருநாடகத் தெலுங்கு மன்னர்கள், பேரரசர்க்கு அடுத்தபடி மாகாணங்களை ஆண்டவர் ‘மண்டலேசுவரர்' எனப்பட்டனர். மாகாண அரசாங்கங்களை நடு அரசாங்கம் இணைத்து நின்றது.

இருந்தனர்; யானைகள்

பேரரசரிடம் ஏறக்குறையப் பதினைந்து லக்ஷம் போர்வீரர் ஆயிரக்கணக்கில் இருந்தன; குதிரைகளும் ஆயிரக்கணக்கில் வாழ்ந்தன. எனவே, பேரரசரிடம் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, என்னும் மூவகைப் படைகளும் இருந்து வந்தன. முதலாம் புக்கராயர் புத்திருரான கம்பண உடையார் என்பவர் அப்படை வன்மை கொண்டு சேர -சோழ-பாண்டிய நாடுகளை வென்றார்; தென்னாட்டு மஹா மண்டலேசுவராக இருந்தார். கிருஷ்ணதேவராயர் காலத்தில் தென்னாட்டு மஹா மண்டலேசுவரர் நாகம நாயக்கர் என்பவர்.

கிருஷ்ணதேவராயர்

இவர் ஏறக்குறையக் கி.பி. 1509-ல் பேரரசர் ஆனார். அப்பொழுது இவருக்கு வயது இருபது. சிங்கக்குட்டிக்கு வீரம் இயல்பாகவே பிறப்புடன் பிறந்து வளர்ந்து வருதல் இயல்பு அல்லவா? அது போலவே அரசமரபில் வந்த கிருஷ்ண தேவராயர் அஞ்சாமை, வீரம், அரசியல் அறிவு முதலிய பண்புகள் வாய்க்கப் பெற்றிருந்தார். அவர், பேரரசுக்கு