98
அப்பாத்துரையம் - 5
‘அவரே ஏற்றவர்' எனக் கூற இராயர், 'சரி மற்போர் நடை பெறட்டும்' என்றார்.
மற்போர்
அரியநாயகர் அரையில் கச்சை கட்டினார்; தோற் தட்டினார்; "வடநாட்டு வீரனே, வருக; நம் இருவர் தோள் வரிசையை இச்சபையார் காணட்டும்” என்றார். உடனே போர் மூண்டது.வடநாட்டான் அரியநாயகரின் கையைக் குலுக்குபவன் போலப் பாசாங்கு செய்தான். அரியநாயகரும் 'வந்தனம்' என்றார். அவ்வளவில் புதியவன் அவரை வாரி எடுத்து மேலே வீச எண்ணினான். அரியநாயகர் மற்போரில் சிறந்த பயிற்சி உடையவர் அல்லவா? அவர் அவனது எண்ணத்தை உணர்ந்து கொண்டார்; அவனிடம் அறப்போர் செல்லாது என்பதை உணர்ந்தார். அதனால் அவர் காலம் தாழ்த்தாது, அவன் கையைப் பற்றிக் கரகர என்று இழுத்து அவனைக் காற்றாடி போலச் சுற்றினார்; முகத்திலும், மார்பிலும், தாளிலு,ம் தோளிலும் மாறி மாறிக் குத்தினார்; தன் தலை கொண்டு அவன் தலையைப் படீரென மோதினார்.
அவ்வளவில் அவனுடைய கழுத்து எலும்பு நறநற என்றது; தலை சிவந்தது; தாளும், தோளும் நசுங்கின. ஆயினும் அவன் வைரங்கொண்டு அரிய நாயகரது கழுத்தை நெரித்தான்; தொடைகளைப் பிசைந்தான்; அவருடைய தாள்களைத் தனித் தனியே இழுத்து எறிய முயன்றான். அவையோர், "இஃது என்ன? மற்போரா? மரணப் போரா?” என்று கவலையோடு கண் இமை கொட்டாது கவனித்தனர். அரியநாயகர் போரை விரைவில் முடிக்க விரும்பித் தம் மதிவன்மையும், தோள்வன்மையும் கொண்டு, அம்மல்லனைத் தந்திரமாகத் தூக்கித் தரையில் போட்டார்; புதிய மல்லன் முதுகில் மண்படியச் செய்தார். அவ்வளவில் அவையோர் ‘அரியநாயகர் வாழ்க!' என்று ஆரவாரம் செய்தனர்!
‘தளவாய்’ப் பதவி
பேரரசர் புதிய மல்லனுக்குப் பரிசுகள் தந்து அனுப்பினர்; தமது பேரரசின் மானத்தைக் காத்த அரியநாயகரை அனைவர்