பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளவாய் அரியநாத முதலியார்

101

படைகட்குத் தலைமை வகித்தனர். யானைகளும் குதிரைகளும் போர் உடையில் திகழ்ந்தன. வீரர்கள், “பீஜப்பூர்ச் சுல்தானைப் புறம் காண்போம்; இராயச்சூரை மீட்போம்" என்று முழங்கினர். பேரரசர் எல்லாப் படைகளையும் பார்வையிட்டார். குறித்த நேரத்தில் படைகள் இராயச்சூரை நோக்கிப் புறப்பட்டன. பேரரசர் படைகட்கு நடுவில் நடுநாயகமாகச் சென்றார்.

போர்

3

இராயச்சூர்க்கு அருகில் இருதிறத்துப் படைகளும் கைகலந்தன. இருபக்கத்து வீரரும் தம்மை மறந்து போரிட்டனர். பீஜப்பூர்ப் படையில் இருந்த குதிரைவீரர் ஆவேசத்துடன் விஜயநகரப் படைகளின் முன் வரிசையிற் பாய்ந்தனர். அப்பொழுது எண்ணிறந்த வீரர் இருபக்கத்திலும் மாண்டு ஒழிந்தனர்.பகைவரது மூர்க்கத்தைக் கண்டு விஜயநகரப் படைகள் சிறிது பின்வாங்கின. அதே சமயத்தில் சுல்தானுடைய ய காலாட்படை கடுகி வந்தது. இராயர் படைகளின் நிலைமை வலியற்றதாக இருந்தது. ஆனால், நல்ல காலம்! துணைப் படை வீரர் பல்லாயிரவராக விஜயநகரத்திலிருந்து விரைந்து வந்தனர்.

பேரரசர்க்கு ஆபத்து

பேரரசர் வெற்றி காணவேண்டும் என்னும் வேட்கையால், போர் முனையில் யாவரும் காண நின்றார்; தம் வீரர்க்கு வீராவேசத்தை ஊட்டினார். பேரரசரைக் கண்ட வீரர் ஊக்கம் கொண்டனர்; துணைப்படை வந்தவுடன் மேலும் கிளர்ச்சி கொண்டனர். அதனால் அவர்கள் தங்கள் முழு ஆற்றலையும் காட்டிப் போரிட்டனர். பீஜப்பூர்ச் சேனை பின் வாங்கி ஓடியது. அப்பொழுது பகைவர் தளபதிகளுள் ஒருவர். அப்பொழுது பகைவர் தளபதிகளுள் ஒருவர் முதுகுகாட்டி ஓடுவதாகப் போக்குக் காட்டிப் பின்புறமாக வந்து திடீரெனத் தாக்கினார். அத்தாக்குதலுக்குக் கூப்பிடு தூரத்திற்றான் பேரரசர் நின்றிருந்தார். தனித்தனிப் பகைவர் படைகளுடன் போராடிக் கொண்டிருந்த இராயருடைய தளபதிகள் இப்பேராபத்தைக் கவனிக்கவில்லை.