தளவாய் அரியநாத முதலியார்
109
போகிறார்? நமது செல்வ மகன் இராயரது சீற்றத்தைத் தணிப்பான்' என்று எண்ணிக் கொண்டு பேசாதிருந்தார்.
அரியநாதர் கவலை
நாகமரால் சிறை செய்யப்பட்ட பாண்டியன் சிறைக் கூடத்திலே இறந்தான். அவன் மகன் விஜயநகரத்தில் இருந்து துன்பப்பட்டான். விஜயநகர அமைச்சருள் அரியநாதர் ஒருவரே தமிழர். அதனால் பாண்டிய குமரன் அவரை அடைக்கலமாகக் கொண்டான். நாகமர் நெறி தவறி விட்டார் என்பது அரியநாதர்க்குக் கவலையை உண்டாக்கியது. அவர் "நாகமர் நமது பழைய தலைவர்; நம் நண்பர் விசுவநாதர்க்குத் தந்தையார், ஆயினும் அவர் செய்தது தவறு. ஆதலின் பாண்டியனுக்கு நீதி வழங்குதலே முறை" எனத் துணிந்தார்.
இராயர் மனக்கவலை
கிருஷ்ணதேவராயர் நாகமரிடமிருந்து பதில் வராததால் மனம் புண்பட்டார்; ‘நீதி தவறாத நமது அரசியலுக்கு நாகமரால் கெட்ட பெயர் வந்ததே!' என்று கலங்கினார். தமது ஆணையைப் பொருட்படுத்தாத அவரது ஆணவத்தை எண்ணிக் கொதித்தார்; நாகமரைப் போரில் வென்று பாண்டிய குமரனை அரசனாக்கத் துணிந்தார். நாகமரைச் சிறைசெய்து கொண்டு வரவேண்டும் என்பது இராயர் விருப்பம்.
இராயர் சீற்றவுரை
இராயர் ஒரு நாள் தம் சேனைத் தலைவர்களையும் அமைச்சர்களையும் பிரபுக்களையும் அவைக்கு வரவழைத்தார்; “நாம் மதுரையைச் சோழனிடமிருந்து மீட்டுப் பாண்டியனுக்குத் தருமாறு நாகமரை அனுப்பினோம் அல்லவா? அவர் அதனை மீறப் பாண்டியனைச் சிறையில் இட்டுத் தாமே மதுரை அரசராக இருக்கின்றார்; அத்துடன் நாம் விடுத்த கடிதத்திற்குப் பதில் அளியாமல் இருப்பது நமது பெருமைக்குச் சிறுமையாகும். பாவம்! அவரால் சிறை செய்யப்பட்ட பாண்டியன் சிறையிலே மடிந்தான். அவன் மைந்தன் தப்பிப் பிழைத்து இங்கு வந்து முறை யிடுகின்றான். நமது ஆணையை மீறிய நாகமரைச் சிறை