தளவாய் அரியநாத முதலியார்
111
கேட்டதும் விசுவநாதர் தம்மை மறந்தார்; உடனே எழுந்தார்; மேற்சொன்னவாறு மொழிந்தார். அவர் மேலும் பேரரசரைப் பணிந்து, “பெருமானே, நாகமர் என் தந்தையார். எனினும் அவர் செய்தது தவறு. நான் அவர் மைந்தன் ஆதலால், நானே அவரை எதிர்த்துச் சிறை செய்துவருதல் முறையோ என்று அஞ்சினேன். இப்பொழுது தாங்களே போருக்குப் புறப்படுவது எனின், நான் இங்கு இருந்து பயன் என்ன? ‘இராஜபக்தியிற் பிழைத்த பாவி’ என்று அல்லவா உலகம் என்னைப் பழிக்கும்! ஆதலால் நான் இப்பொழுதே மதுரை செல்வேன்; நாகமரைப் போரில் வென்று தங்கள் முன் கொணர்ந்து நிறுத்துவேன்,” என்று பேசினார்.
ராயர் எண்ணம்
"
இராயர் விசுவநாதர் பேச்சைக் கேட்டார்.அவருக்குச் சிறிது சீற்றம் தணிந்தது. ஆயினும், ‘விசுவநாதன் நாகமர் மகன். இரத்த பாசம் கொடியது. இன்னும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டால் எ ன்ன செய்வது! ஆதலால் முன் எச்சரிக்கையாக விசுவநாதனுடன் நமது அரியநாதனை அனுப்புவோம். அவன் விசுவநாதனுக்கு எவ்வகையிலும் சமமானவனே. மேலும் அவன் தமிழ் நாட்டான்; அங்குள்ள தமிழரைத் தன் வயப்படுத்த வல்லவன்; நமக்காக உயிரையும் விடும் உத்தமன்' என்று தமக்குள் முடிவு செய்து கொண்டார்.
இராயர் ஆசி கூறல்
இராயர் விசுவநாதரை அன்புடன் நோக்கி, “அப்பனே, உன் இராஜபக்தியைப் பாராட்டினோம். நீ உன் உயிர் நண்பனான அரியநாதனுடன் உடனே புறப்படு. உனக்கு வெற்றி உண்டாகுக!” என்று ஆசீர்வதித்தார். பேரரசர் தம்மை உடன் அனுப்பும் நோக்கத்தைக் குறிப்பால் உணர்ந்த அரியநாதர், அரசரைப் பணிந்து விடை பெற்றுக் கொண்டார். விசுவநாதரும் அரியநாதரும் பண்பட்ட படைகளுடன் தென்னாடு நோக்கிப் புறப்பட்டனர்.
மதுரை நிகழ்ச்சிகள்
இராயர் ஆணைப்படி தம் மைந்தரே போருக்கு வருகின்றார் என்பதை நாகமர் அறிந்தார்; அவருடன் தம்மிடம்