பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளவாய் அரியநாத முதலியார்

பாண்டியநாட்டில் அரியநாதர்

113

விசுவநாதர் அரியநாதரை நோக்கி, "நண்பரே, நான் தந்தையாரை விஜயநகரம் அழைத்துச் செல்வேன். பேரரசர் பாண்டிய நாட்டைப் பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை நீர் இங்குப் பாண்டியனுக்கு உதவியாக இருந்து வருக; நம் பேரரசின் பிரதிநிதியாக இருந்து கவனிக்க வேண்டும் வேலைகளையும் கவனித்து வருக" என்று கூறினார். அரியநாதர் அதற்கு உடன்பட்டார். விசுவநாதரும் நாகம நாயக்கரும் விஜயநகரம் நோக்கிச் சென்றனர்.

இராயர் திருமுன்

6

சில நாட்களில் இருவரும் தம் படையுடன் விஜயநகரம் மீண்டனர். அவர்கள் மீண்ட நேரத்தில் பேரரசர் அவையில் இருந்தார். விசுவநாதர் நாகம நாயக்கருடன் அவைக்குள் நுழைந்தனர். இருவரும் பேரரசரை வணங்கி நின்றனர். இராயர் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. சபையோர், “விசுவநாதர் உண்மையான இராஜபக்தி உடையவர். பிள்ளை என்பவன் இப்படி அல்லவா இருத்தல் வேண்டும்!" என்று பேசிக் கொண்டனர். நாகமர் சொல்ல முடியாத நாணத்தால் தலைகுனிந்து நின்றார்.

விசுவநாதர் வேண்டுகோள்

இராயர் விசுவநாதரை அன்புடன் நோக்கினார்; “உனது உண்மையான ஊழியத்தைப் பாராட்டுகின்றோம். உனக்கு யாது பரிசு வேண்டும்?" என்று கேட்டார். உடனே விசுவநாதர் இராயரை வணங்கி, "பெருமானே, எனக்குப் பொன்னும், பொருளும், போகமும் வேண்டுவதில்லை. என் தகப்பனார் ஆகிய நாகமரைத் தாங்கள் மன்னித்து, அவரை மஹா மண்டலேசுவரர் பதவியில் மீட்டும் வைப்பதாகிய பரிசு ஒன்றையே வேண்டுகிறேன்" என்று உருக்கமாக உரைத்து நின்றார்.

இராயர் கருணை

இராயர் விசுவநாதர் முகத்தைப் பார்த்தார். அப்பொழுது விசுவநாதர் கண்கள் இராயரை ஆவலோடு நோக்கின. நாகமர்