தளவாய் அரியநாத முதலியார்
முதலியாரும் சேதுபதியும்
121
இராமநாதபுரம் ஜில்லாவை ஆண்ட சேதுபதி உ உரிமை வீரர். அவர் விஜயநகரப் பேரரசுக்கு ஒரு சமயம் அடங்கி நடப்பார்; மற்றொரு சமயம் அடங்காது நடப்பார். அவர் நாட்டில் மறவர் மிகுதி. மறவர் சிறந்த தமிழ் வீரர். அவர்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் போர்த் தொழிலில் ஈடுபட்டுவந்த மரபினர். சேதுபதி அம்மறவர் துணையைப் பெற்று எந்த அரசரையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றவர். அரியநாத முதலியார் அத்தகைய சேதுபதியைச் சாம பேத -தான தண்டத்தால் அடக்கி, அவருடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.
முதலியாரும் கொங்குநாடும்
-
இவ்வாறு பாண்டிய நாட்டைப் பயன்படுத்திய முதலியார் கொங்கு நாட்டை அடைந்தார். அந்நாடு சேலம், கோயமுத்தூர், நீலகிரி ஜில்லாக்களைக் கொண்டது. இராயர் ஆட்சிக்கு அடங்காமல் குறுநில மன்னர் சிலர் அங்குச் சென்றதும், அவர்கள் பெட்டிப் பாம்புபோல அடங்கினர். இங்ஙனம் அரியநாத முதலியார் நாயக்க அரசரைத் தென்னாட்டில் பரப்பி நிலைபெறச் செய்தார்.
நாடெங்கும் கோட்டைகள்
இந்தப் பரந்த பெருநாட்டைக் காப்பது எப்படி? முதலியார் இப்பெரு நாட்டின் முக்கிய இடங்களில் கோட்டைகளை எழுப்பினார்; மைசூர்க்கும் கோயமுத்தூர்க்கும் இடைப்பட்ட சத்தியமங்கலம் என்னும் ஊரில் ஒரு சிறந்த கோட்டை எழுப்பப்பட்டது. பவானித் தாலூகாவில் காவேரிபுரத்தில் ஒரு கோட்டை அமைக்கப்பட்டது.ஆண்டியூர்க்கோட்டையும் ஒன்று. கோயமுத்தூருக்கு அப்பால் பாகேசுவரன் கோட்டை, மலைக்கோட்டை முதலியன எழுப்பப்பட்டன. சேலத்திலும் ஒரு கோட்டை எழுந்தது. ஓமலூர், சேத்தமங்கலம், அனந்தகிரி, மோகனூர்,பரமட்டி, சங்கரிதுர்க்கம், நாமக்கல், திருச்செங்கோடு முதலிய இடங்களில் கோட்டைகள் கட்டப்பட்ட தெற்கே மதுரை, திண்டுக்கல், அழகர்மலை முதலிய டங்களில்