தளவாய் அரியநாத முதலியார்
125
பல சிற்றூர்களை அளித்தார்; அவர்கட்குப் பாளையக்காரர் என்ற பெயர் சூட்டினார்.பாளையக்காரர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி பாளையம் எனப் பெயரிடப்பட்டது.
பாளையக்காரர் உரிமைகள்
பாளையத்தில் வரிதண்டுதல், நீதி வழங்குதல், படை வைத்துக் கொள்ளுதல், பாதுகாவல் புரிதல் முதலிய அனைத்தும் பாளையக்காரர் கடமை. பாளையத்தின் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு பாளையக்காரர் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பங்கைப் பாளையத்துக்காகச் செலவிட வேண்டும், ஒரு பகுதியை நாயக்க மன்னருக்கு ஆண்டுதோறும் சேர்ப்பிக்க வேண்டும்.
பாளையக்காரர் தம் பாளையத்திற்கு அரசர் ஆவர். பாளைய மக்கள் அவரை 'அரசர்' என்று அழைப்பர். று பாளையக்காரர் விடுதி 'மாளிகை' அல்லது 'அரண்மனை' என்றே அழைக்கப்படும்.பாளையக்காரர் பெரு மக்களும் பிறரும் புடைசூழக் கொலு இருப்பர். சிறப்பு நாட்களில் குடிகள் அரசரைப் பணிந்து காணிக்கை செலுத்துவர். அவர் முடி மன்னரைப் போலப் பரிவாரங்கள் புடை சூழப் பவனி வருவர். இராஜ சின்னங்களான குடை சாமரம் - முரசம் முதலியன அவர்க்கு உண்டு.
பாளையக்காரர் கடமைகள்
-
பாளையக்காரர் தம் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் காடழித்தல், கிராமங்கள் அமைத்தல், பயிர்த் தொழிலைப் பெருக்குதல், கைத்தொழில்களை வளர்த்தல், கோவில்களை அமைத்தல், அவற்றைப் பாதுகாத்தல், சாலைகளை அமைத்தல், நீர்ப்பாசன வசதிகளை உண்டாக்குதல், நாட்டைக் காவல் புரிதல், வழக்குகளை விசாரித்து நீதி வழங்குதல், கல்விச் சாலைகளை வைத்தல், படை ஒன்றைத் தயாரித்துப் பாதுகாத்தல் வருதல் முதலியன செய்யக் கடமைப்பட்டவர்; தேவை உண்டாயின; பேரரசருக்கு அப்படையைப் போருக்கு உதவவும் கடமைப்பட்டவர் ஆவர். பாளையக்காரர் தமது பாளையத்தை அடுத்து இருக்கும் (அரசர்க்குச் சொந்தமான) சிற்றூர்களையும் கண்காணிக்க வேண்டும்.