(126)
கோட்டைக் காவல்
அப்பாத்துரையம் - 5
அரியநாதர் அமைந்த பாளையங்கள் எழுபத்திரண்டு. ஆகவே பாளையக்காரர் எழுபத்திரண்டு பேர் உண்டாயினர். மதுரைக் கோட்டையின் கொத்தளங்கள் எழுபத்திரண்டு அல்லவா? ஒவ்வொரு கொத்தளமும் ஒரு பாளையக்காரர் காவலில் விடப்பட்டது. அப்கொத்தளத்தைப் பாதுகாப்பதற்கு உரிய செலவு முழுவதும் அப்பாளையக்காரரைச் சேர்ந்தது. போர்க்காலத்தில் தாம் பேரரசர்க்கு அனுப்பும் படைக்கு உண்டாகும் செலவை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்; தம் பிரதிநிதியாகத் தம் பாளையச் செய்திகளை அரசர்க்கு எடுத்துக் கூற, அறிஞர் ஒருவர் அரச சபையில் எப்பொழுதும் இருந்துவர ஏற்பாடு செய்ய வேண்டும்.
பாளையத்தில் தலையாரி
பாளையக்காரர் உத்தியோகஸ்தர் பலரை நியமித்துப் பாளைய விஷயங்களைக் கவனிப்பர். அவரது பாளையத்தைக் காவல் புரியத் தலையாரி ஒருவன் இருப்பான். ஊரையும் ஊர்ப்பாதைகளையும் காவல் புரிதல் அவன் தொழில். களவைக் கண்டுபிடிக்கும் தொழிலும் அவனுடையதே. திருட்டைக் கண்டு பிடியாவிடில் களவுபோன பொருள்களின் மதிப்பை அவன் கட்டித்தரவேண்டும். இந்தக் கடுமையான விதியினால், தலையாரி இராப்பகலாகப் பாளையத்தைக் காத்து வருவான் அல்லவா?
அனைவருக்கும் ஆறுதல்
முதலியார் அமைத்த இப்பாளைய வகுப்புத் திட்டத்தால் பெருமக்களும் சிற்றரசரும் ஆறுதல் அடைந்தனர்; நாயக்கர் அரசின்மீது இருந்த சீற்றத்தை விட்டனர்; மன மகிழ்ச்சியோடு தத்தம் பாளைய முன்னேற்றத்தில் கருத்தைச் செலுத்தினர்; காடுகளைக் கெடுத்து நாடாக்கினார்; அதனால் கொடிய விலங்குகளின் தொல்லையையும் வழிப்பறி செய்பவர் தொல்லையையும் ஒழித்தனர்; நீர்ப்பாசன வசதியைப் பெருக்க ஆறுகளிலிருந்து கால்வாய்களை வெட்டினர்; ஏரிகளைத் தோண்டினர்; வறண்ட நிலப்பகுதிகளை வேளாண்மைக்கு உரிய நன்னிலம் ஆக்கினர்; கைத்தொழில்களை வளர்த்தனர்; மலையடிவாரங்களைப் பண்படுத்திப் பயிர் செய்யவழி