144
அப்பாத்துரையம் - 5
-
இருக்கின்ற தொண்டை மண்டல முதலிமார்கள் அங்கு எவ்வாறு சன்றார்கள்? அவர்களுடைய முன்னோர் அரியநாத முதலியார் காலத்து முன்னோர் அரியநாதர் தூண்டுதலால் பாண்டிய நாட்டிற் குடியேறியவர் ஆவர். அவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் குடியேறினமைக்குத் தளவாய் அவர்களே காரணம். முதலியார் தாமிரபரணி ஆற்றங்கரையில் தம் பெயரால் அரியநாயகபுரம் என்ற கிராமத்தை அமைத்தார்?
அக்கிரகாரங்கள்
வேதம் - உபநிடதம் - புராண இதிகாசங்கள் இவற்றில் முதலியாருக்கு மிகுந்த மதிப்புண்டு. அவற்றைப் படித்து ஒழுக்கத்தில் சிறந்து இருந்த நான்மறையாளரிடம் அவருக்குப் பற்று மிகுதி. அவர் அவர் அவர்களுக்குப் பல ஊர்களில் அக்கிரகாரங்களை அமைத்துக் கொடுத்தார்; அவர்கட்கு வேண்டிய நிலங்களைத் தாம் செய்தார்.
கோவில் திருப்பணிகள்
முதலியார் கோவில் திருப்பணி செய்வதில் ஊக்கம் உடையவர். அவர் திருப்பணி பெறாத பெருங்கோவில்கள் தென்னாட்டில் சிலவென்றே சொல்ல வேண்டும். பாளையங்கோட்டையில் அவர் அமைத்த கோவில்கள் இன்றும் அவர் பெயரைச் சிறப்பிக்கின்றன. திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கோவில், அவர் அங்குக் கோபுரங்களையும் மண்டபங்களையும் எழுப்பினார். அங்குள்ள ஆயிரக்கால் மண்டபம் அவர் எழுப்பியதாகும்.
மதுரையில் திருப்பணி
மீனாக்ஷி - சுந்தரேசர் கோவிலில் முதலியார் செய்த திருப்பணிகள் மிகப் பல. அங்குள்ள ஆயிரக்கால் மண்டபம் அவரால் எழுப்பப்பட்டது. அவர் அறுபத்து மூவர் மண்டபத்தை எழுப்பினார்; மீனாக்ஷி அம்மைக்கு அளவற்ற அருங்கலன்கள் செய்தளித்தார்; பள்ளியறை, அறச்சாலை அமைத்தார்; சொக்கப் பெருமானுக்கு வெள்ளி அரியணை ஒன்று செய்து வைத்தார்;