பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

அப்பாத்துரையம் - 5

மீது மதிப்புக் குறைந்தவர் அல்லர். அவர் மதுரை அமைச்சராக இருந்த பொழுது கிறித்தவப் பாதிரிமார் தென் பாண்டிக் கரையோர நகரங்களில் தங்கள் சமயபோதனை செய்து வந்தனர். அவர்கள் அதனை மதுரையிலும் செய்ய விரும்பி அரசரை அனுமதி கேட்டனர். அரசர் அமைச்சரைக் கேட்டார். அமைச்சரான முதலியார் பரந்த சமய நோக்கம் கொண்டவர் ஆதலின், உடனே அனுமதி தருமாறு அரசர்க்கு யோசனை கூறினார். ‘மக்களுக்குச் சமயத்தில் கட்டுப்பாடு இருத்தல் ஆகாது; அவரவர் தத்தமக்கு விருப்பமான சமயத்தைப் பின்பற்றி வாழ உரிமை இருத்தல் வேண்டும்' என்பதே அப்பெரியாரது பரந்த சமய நோக்கம் ஆகும்.

பொன்றாப் புகழ்

அரியநாதர் குடிசையிற் பிறந்தவர்; ஆனால் தம் வாள்வலியாலும் அறிவாற்றலாலும் ஒழுக்கத்தின் விழுப்பத்தாலும் கணக்கர் அரண்மனைக் கணக்கர் அரண்மனைப் பெரிய கணக்கர் - அரசாங்கப் பெரிய கணக்கர் தளவாய் அமைச்சர் என்ற பதவிகளைப் படிப்படியாக விஜயநகரத்திற் பெற்றார்; பின்னர் அப்பேரரசு முழுவதற்குமே தளவாய் என்ற பதவியும் பெற்றார்; மதுரை நாயக்க மன்னர் நால்வர்க்கு அமைச்சராகவும் தளவாயாகவும் இருந்து அரும்பணி செய்தார்; குடிகட்கு நலன்களைச் செய்தார்; சமயத் துறையில் தொண்டு செய்தார்; இங்ஙனம் பல துறைகளிலும் பங்கெடுத்துக் கொண்டதால் அப்பெருந் தமிழர் விஜய நகர வரலாற்றிலும், மதுரை - நாயக்க மன்னர் வரலாற்றிலும் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார்; நாயக்க மன்னர் காலக் கட்டடக் கலை வரலாற்றிலும் தக்க பெற்றார். இஃதன்றோ

பொன்றாப்புகழ்!

அடிக்குறிப்புகள்

இடம்

-

-

1.

சோழனுக்கு யமன் - இது பாண்டியன் விருதுப் பெயராகும்

2.

Indian Antiquary, 1916, PP. 85-86.

3.

மதுரைத் திருப்பணிமாலை

4.

கி.பி. 600-900