பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளவாய் அரியநாத முதலியார்

மண்டப அமைப்பு

151

இம்மண்டபம் இரண்டு யானைகளால் இழுக்கப்படும் ஒரு தேர் போன்ற அமைப்பில் அமைந்துள்ளது.மண்டபத்தில் உள்ள தூண்கள் வரிசை வரிசையாகவும், எங்கிருந்து பார்ப்பினும் ஒரே வரிசையாகவும் காட்சியளிக்கின்றன. ஒருவன் இம்மண்டபத்தில் எந்த இடத்தில் நின்றாலும், மண்டபத்தின் நடுவில் அமைந்திருக்கும் கூத்தப்பிரான் திருவுருவத்தினைக் கண்டு களிக்க முடியும்.

தளவாய் உருவச்சிலை

ஆயிரங்கால் மண்டபத்திற்குள் நுழையும் வாசலில் ஏறக்குறைய ஆறு சிலைகள் காட்சி தருகின்றன. அவை ஒவ்வொன்றும் உயிருடன் இருப்பவை போலவே காணப்படு கின்றன. அவற்றுள் தலைசிறந்தன அரியநாத முதலியார் சிலையும் அரிச்சந்திரன் சிலையுமாம். அரியநாதரின் சிலை அமைப்பைக் காணூம்போது, 'இவ்வுருவத்தை அமைப்பதற் கென்றே இதனைச் செய்த சிற்பி பிறந்தானோ!' என்னும் எண்ணம் உண்டாகிறது. குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் தளவாயின் தோற்றம் அவருடைய அஞ்சா நெஞ்சம், உழைப்பு, எடுத்த காரியத்தைச் செவ்வனே செய்வதில் உள்ள ஆர்வம், முகப் பொலிவு இவற்றை நமக்கு உணர்த்துகிறது. அரியநாத முதலியார் ஏறி நடத்தும் குதிரை, நாற்கால் பாய்ச்சலில் ஓடுவது போலக் காணப்படுகிறது. முதலியார் அதன் கடிவாளங்களை மிகவும் உறுதியாக இழுத்துப் பிடித்துள்ளார். எனினும் அக்குதிரை அதனைப் பொருட்படுத்தாது போவது போலக் காணப்படுகிறது.

கண்ணப்பர்

-

நாம், அரியநாதர் சிலைக்கு அண்மையில் கண்ணப்பர் வரலாற்றைச் சிற்பங்களின் மூலமாகக் காணலாம். அங்குள்ள சிற்பங்களைக் கொண்டே கண்ணப்பர் வரலாறு முழுவதும் உணரத்தக்க முறையில் சிற்பி அமைத்துள்ளான்.

அரிச்சந்திரன்

வாசலின் மறுபக்கத்தில் அரிச்சந்திரன் உருவச்சிலை காணப்படுகிறது. அதன் பக்கத்தில் இறந்த தன் மைந்தனைத்