(160)
|--
அப்பாத்துரையம் – 5
பின்னர் மாலிக் காபூர் தெற்கே இருந்த ஹொய்சள நாட்டைத் தாக்கினார். அப்பொழுது ஹொய்சள அரசனாக இருந்தவன் மூன்றாம் வல்லாளன் என்பவன். அவன் அறிவிற் சிறந்தவன்; கட்டுப்பாடும் தக்க பயிற்சியுமுடைய முஸ்லிம் படைகட்கு முன் நிற்பது தவறென்பதை உணர்ந்து அடங்கினான்; அளித்து, டெல்ஹி அரசுக்கு
பெருஞ் செல்வத்தை
அடங்கியிருப்பதாக உறுதி கூறினான்.
ய
அவ்வமயம் பாண்டியன் அரியணைக்கு மதுரையில் போட்டி உண்டாயிற்று. அதனால் நாட்டில் குழப்பம் உண்டானது. அக்குழப்ப நிலையைக் கேள்வியுற்ற மாலிக் காபூர் பாண்டிய நாட்டின்மீது பாய்ந்தார். பாண்டியன் ஓடி ஒளித்தான். பாண்டிய நாட்டுக் கோவில்கள் சூறையாடப் பட்டன. விக்கிரகங்கள் தவிடு பொடியாயின. பல கோயில்கள் அழிக்கப் பட்டன. கோவில்களில் குவிந்திருந்த செல்வமும் பாண்டியன் அரச பண்டாரமும் கொள்ளை போயின. மதுரையில் சுல்தான் பிரதிநிதி ஒருவர் அரசராக்கப் பட்டார். இங்ஙனம் மாலிக் காபூர் நான்கு பேரரசுகளையும் ஒடுக்கி அளவற்ற செல்வத்துடன் டல்ஹி மீண்டார்.
முஹம்மத் பின் துக்ளக்
இவர் டெல்ஹியில் பேரரசர் ஆவதற்கு முன்னரே ஓரங்கல் நாட்டைக் கைப்பற்றினார். அதனால் கிருஷ்ணையாறுவரை இவரது செல்வாக்குப் பரவியது. இவருக்கு அடங்கிய மாகாணத் தலைவரும் அத்தை புத்திரருமான பஹாபுத்தீன் என்பவர் இவரைப் பேரரசராக மதிக்கவில்லை. அதனால் இவர் பஹாவுத்தீனைப் போரில் முறியடிக்க முனைந்தார். பஹாவுத்தீன் துங்கபத்திரைக் கரையில் உள்ள கம்பிலி நகர அரசனிடம் சரண் புகுந்தார். துக்ளக் சினங்கொண்டு கம்பிலி நகரை முற்றுகையிட்டுக் கடும்போர் புரிந்து 1326-இல் கம்பிலி ல் அரசனைக் கொன்றார்;பஹாவுத்தீனும் கொல்லப்பட்டார்.
மூன்றாம் வல்லாளன்
இங்ஙனம் கம்பிலி முஸ்லிம் ஆட்சிக்கு உட்பட்டவுடன் மூன்றாம் வல்லாளன் திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உள்ள