கிருட்டிண தேவராயர்
161
கண்ணனூரைத் தலை நகரமாகக் கொண்டான்; மதுரையை ஆண்ட சுல்தான்கள் தொல்லை மிகுதிப்படவே, கண்ணனூரைத் துறந்து திருவண்ணாமலையைத் தலை நகரமாகக் கொண்டான்; அங்கிருந்து பெரும்படை திரட்டிக் கண்ணனூரை அடைந்து, மதுரைச் சுல்தான் படைகளுடன் போரிட்டான்; முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்பினர். வல்லாளன் அதற்கு உடன்பட்டான். ஆயின் அன்றிரவே பகைவர் திடீரென வல்லாளன் படைகள்மீது பாய்ந்து கொன்றனர். வல்லாளனும் கொல்லப்பட்டான். இந்தியாவின் தென்பகுதியில் சிறப்புற்றிருந்த நான் வல்லரசுகளும் அயலவர் படையெடுப்பினால் இங்ஙனம் அழிந்தொழிந்தன.
சங்கமன் மக்கள்
கு
‘யது' என்னும் அரச மரபினைச் சேர்ந்த சங்கமன் என்பவனுக்கு மக்கள் ஐவர் இருந்தனர். 2அவர்கள் ஹரிஹரர், கம்பணர், புக்கர், மாரப்பர், முத்தப்பர் என்பவர். அவருள் ஹரிஹரரும் புக்கரும் காகதீய அரசனான பிரதாபருத்திரனிடம் அரச பண்டார அதிகாரிகளாக இருந்தனர். காகதீய அரசு வீழ்ச்சியுற்ற பிறகு கம்பிலி அரசனிடம் சென்று, அவனுடன் மணவுறவு கொண்டு வாழ்ந்தனர். கம்பிலி அரசன் போரில் கொல்லப்பட்டதும் ஹரிஹரரும் புக்கரும் சிறைசெய்யப்பட்டு டெல்ஹிக்கு அனுப்பப் பட்டனர். அவர்கள் சிறையில் ஒழுங்கு தவறாது நடந்து கொண்டமையால் சுல்தான் மகிழ்ச்சியடைந்து, அவர்களைத் தம் அரச சபையிலேயே உயர் அலுவலாளராக அமர்த்தினார்; அவ்விருவரையும் இஸ்லாத்தைத் தழுவச் செய்தார். அவர்கள் சுல்தானது பெருமதிப்புக்கு உரியவராக இருந்து வந்தனர்.
அக்காலத்தில் மூன்றாம் வல்லாளன் கன்னட காட்டில் குழப்பத்தை உண்டாக்கினான். துக்ளக் ஹரிஹரரையும் புக்கரையும் பெருஞ் சேனையுடன் அனுப்புனார். சகோதரர் இருவரும் கர்நாடகத்தை அடைந்து குழப்பத்தை அகற்றி அமைதியை நிலைநாட்டினர்.சுல்தான் மனமகிழ்ந்து அவர்களைக் கர்நாடகத்தை ஆண்டுவருமாறு செய்தார். அதனால் கம்பிலி நகரம் உட்பட்ட3 கர்நாடகம் சகோதரர் ஆட்சிக்கு உட்பட்டது.