பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிண தேவராயர்

163

என்பவற்றையும் ஊட்டிவந்தன. இவை அந்தந்த இடத்துப் பொது மக்கள் துணையாலும் அரசர் ஆதரவினாலும் சிறந்த முறையில் தொண்டாற்றி வந்தன. அரசரும் அரசியல் உத்தியோகஸ்தர் களும் இவற்றிற்கு நிலங்களையும் பொருளையும் மானியமாக விட்டனர்; அடிக்கடி இவற்றைப் பார்வையிட்டனர். இந்த மடங்களில் சமயக் கல்வி கற்கும் மாணவர் இருந்தனர்; பொதுமக்கட்குச் சமயக் கல்வி புகட்டத் துறவிகள் இருந்தனர். அவர்கள் தங்கள் சமயம் வேற்று நாட்டார் படையெடுப்பினால் பாதிக்கப்படாமல் இருந்ததற்காகப் பொது மக்கட்கு நாட்டுப் பற்றை நன்முறையில் ஊட்டி வந்தனர். இத்தகைய மடங்களின் தலைவர்கள் அடிக்கடி அரசர்களைச் சந்திப்பதுண்டு; அவர்களைக் கொண்டு சமய தொண்டுகளைச் செய்விப்பதும் உண்டு.

சிருங்கேரி மடம்

முன்னேற்றத்துக்கான

இங்ஙனம் பொது மக்கட்குத் தொண்டாற்றி வந்த மடங்களுள் சிருங்கேரி மடம் ஒன்று. அது துங்கபத்திரை யாற்றுக்குத் தென்பால் கர்நூல் ஜில்லாவில் இருக்கின்றது. அஃது ஆதி சங்கரரால் ஏற்படுத்தப் பட்ட எட்டு மடங்களில் ஒன்று. அதனில் கல்வியிலும் ஒழுக்கத்திலும் நாட்டுப்பற்றிலும் மிகச் சிறந்துவிளங்கிய துறவிகளே தலைவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் தக்கணப் பீடபூமியில் அத்வைத மதத்தைப் பொது மக்களிடம் பரவச் செய்து வந்தார்கள். துங்கபத்திரை, கிருஷ்ணை. கோதாவரியாறுகளின் அருகில் வாழ்ந்த அரசர்கள் சிருங்கேரி மடத்தை ஆதரித்து வந்தார்கள். ஆதிசங்கரர் காலத்தில் இருந்த சாளுக்கியர் என்ற பேரரசர்கள் சிருங்கேரி மடத்தை ஆதரித்துவந்தார்கள். அவர்கட்குப்பின் துவார சமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்ட ஹொய்சளரும் தேவகிரி' யைத் தலைநகராகக் கொண்ட தக்காணப் பீடபூமியை ஆண்ட யாதவரும் சிருங்கேரி மடத்திற்கு ஆதரவு செய்துவந்தனர்.

வித்தியா சங்கரர்

கி.பி.13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வித்தியா சங்கரர் என்னும் பெரியார் சிருங்கேரி மடத்துத் தலைவராக இருந்தார். அவர் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்; நாட்டுப்பற்று