கிருட்டிண தேவராயர்
165
பாதுகாக்கவும் இந்து இராச்சியத்தை நிலை நாட்ட அவாவினர்; அதற்காக வித்தியாரண்யர் ஆசியையும் உதவியையும் பெறச் சிருங்கேரிக்குச் சென்றனர்.
விஜயநகரம்
வித்தியாரண்யர் அவர்களது நல்ல நோக்கத்திற்கு உதவி செய்ய விரும்பினார். உடனே அவர்களுடன் புறப்பட்டுத் துங்கபத்திரைக் கரையருகிற் சென்றார். அவர் ஓர் இடத்தில் தங்கி இளைப்பாறினார். அப்பொழுது குருக்கள் ஒருவர் அவ்வழி வந்தார். வித்தியாரண்யர் அவர் அந்த இடவரலாறு கூறுமாறு கேட்டார். குருக்கள், “இந்த இடமே பம்பை என்றும் ஹம்பி என்றும் சொல்லப்படுவது. இதனைச் சுற்றிலும் மாதங்கமலை. மாலவதம், ஏமகூடம், பசுபசிருங்கம், கிஷ்கிந்தம் என்னும் ஐந்து மலைகள் இருக்கின்றன. வால்மீகியால் புகழப்பட்ட பாம்பாசரஸ் இங்குத்தான் இருக்கின்றது. இவ்விடத்தில்தான் சுக்கிரீவன், அநுமார் முதலிய வானர வீரர் வசித்தனர். இராமன் வானரரைச் சந்தித்த இடம் இதுதான்” என்று கூறினர்.
உடனே முனிவர், "இந்தப் புண்ணிய பூமியே புதிய நகரத்திற்கு ஏற்ற இடமாகும்,” என்று கூறினர். பிறகு நல்ல நாளில் நகர அமைப்புத் திட்டம் போடப்பட்டது. உடன் பிறந்தார் இருவரும் முனிவரும் பொருள் உதவி செய்து கட்டிட வேலையைத் தொடங்கினர். அவர்கள் அங்கிருந்த மலைக்குகை ஒன்றில் பெருஞ் செல்வத்தைக் கண்டெடுத்தனர்; அதன் உதவியைக் கொண்டு நகர அமைப்பு வேலை நடந்தது.
விஜயநகர அரசு
வித்தியாரண்யர், ஹம்பியில் கோவில் கொண்டுள்ள விரூபாக்ஷருக்கு நாட்டை அளித்து ஹரிஹரரை அக்கடவுளின் பிரதிநிதியாக இருந்து அரசாளுமாறு யோசனை கூறினார். ஹரிஹரரும் புக்கரும் இஸ்லாத்தை விட்டு முன் போல இந்துக்களாகி வித்தியாரண்யர் கூறியவாறே நாட்டை விரூபாக்ஷருக்குத் தானமாக அளித்து, அவர் பிரதிநிதியாக இருந்து நாட்டை ஆளலாயினர்; வித்தியாரண்யர் உதவி கொண்டு அமைக்கப்பட்ட நகரத்திற்கு வித்தியாநகரம் எனப்