பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(166)

11

அப்பாத்துரையம் – 5

பெயரிட்டனர். அந்நகரமே நாளடைவில் விஜயநகரமே எனப் பெயர் பெற்றது.

விஜயநகர அரசு முஸ்லிம் படையெப்பைத் தடுக்கவும் இந்து தர்மத்தைப் பாதுகாக்கவும் ஏற்பட்டது. அஃது ஏறத்தாழ கி.பி. 1336-இல் ஏற்பட்டதென்னலாம். வித்தியாரண்யர் இராஜ குருவாக இருந்த அரசு வலுப்பெறத் தம்மால் இயன்றன எல்லாம் செய்து 1386-இல் காலமானார். அப்பெரியாருக்கு ஹம்பியில் விரூபாக்ஷர் கோவிலுக்கு மேல் அமைந்துள்ள பாறைமீது கோவில் கட்டப் பட்டது. அப்பாறைமீது இருந்து கவனிப்பின் விஜயநகரத்தின் முழு அமைப்பையும் செவ்வனே காணலாம்.

அடிக்குறிப்புகள்

1.

2.

3.

4.

5.

இதனை 'வாரங்கல்', 'வாரங்கல்', 'ஓரங்கல் என்றும் கூறுவர்.

இச்சங்கமன் ஹொய்சளர் படைத்தலைவன்; கருநாடகத்தின் ஒரு பகுதிக்குத் தலைவனாக இருந்தான். இவன் முஸ்லிம்களுடன் போரிட்டவன்; சீரங்கப் பட்டணத்தை வென்றவன். Beginnings of Vijayanagara History, PP. 73-74. Further Sources of Vijayanagara History, I. Vol. I. PP. 32-33.

Ibid. P. 42.

தேவகிரி பிற்காலத்தில் 'ஔரங்கபாத்' எனப் பெயர் பெற்றது. V.A.Smith, Oxford History of India. P. 204.