பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(168

அப்பாத்துரையம் – 5

என்ற இடங்களில் தலை நகரங்களை அமைத்துக் கொண்டு சோழ அமைத்துக்கொண்டு நாட்டை ஆளத் தொடங்கினர். சோழப் பெருநாடு சிதறுண்ட பிறகு தொண்டை மண்டலம் சாம்புவராயர் என்ற சிற்றரசர் ஆட்சியில் இருந்தது.வடபாண்டிநாடு முஸ்லிம்கள் கைப்பட்டது.

கம்பணவுடையார் வெற்றி

கம்பணவுடையார் ஏறத்தாழ கி.பி. 1352-இல் தொண்டை நாட்டைக் கைப்பற்ற விரும்பினார். அவரது தானைத் தலைவரும் அமைச்சரும் ஒருவரே. அவர் சோமய்ய தண்ட நாயக்கர் என்பவர். அவர் மைந்தர் மாரய்ய நாயக்கர் என்பவர் கம்பணவுடையாரிடம் சேனைத்தலைவராக இருந்தார். அச்சேனைத் தலைவர் ஒரு பெரும்படையுடன் தொண்டை நாட்டின்மீது படையெடுத்தார்; எளிதில் சாம்புவராயரைத் தோல்வியுறச் செய்தார். இராஜ நாராயணச் சாம்புவராயர் என்பவர் கம்பணவுடையார்க்கு அடங்கிய சிற்றரசராக இருக்க ஒப்புக் கொண்டார். இந்த வெற்றியால் விஜயநகர அரசு தென் ஆர்க்காடு ஜில்லாவரை பரவியது.

மதுரையில் முஸ்லிம் ஆட்சி

மதுரையில் கி.பி. 1324 முதல் 1371 வரை முஸ்லிம் ஆட்சி நிலவி இருந்தது. அக்காலத்தில் பாண்டிய நாடு கொள்ளை கொலை கொடுமை ஆகிய மூன்றையும் தரிசித்தது. புகழ்பெற்ற மதுரை மீனாக்ஷியம்மன் கோவில் சீரழிக்கப்பட்டது. அதன் ஏழு மதில்களும் பதினான்கு கோபுரங்களும் மதில்கட்கு இடைப்பட் தெருக்களும் தலைமட்டம் ஆயின; கருவறை, நடு மண்டபம், முன் மண்டபம் ஆகிய மூன்றே விடப்பட்டன. கோவிலில் இருந்த விக்கிரகங்கள் நாஞ்சில் நாட்டுக்கு (தென் திருவாங்கூர்க்கு) எடுத்துச் செல்லப்பட்டன. சீரங்கம் கொள்ளைக்கும் கொலைக்கும் நிலைக்களன் ஆயது. பல கோவில்கள் பாழாயின. பலவற்றில் இருந்த விக்கிரகங்கள் வேறு இடங்கட்குக் கொண்டு செல்லப்பட்டன. நாட்டில் சைவ வைணவச் சமயங்கள் தத்தளித்தன. முஸ்லிம் ஆட்சிக் கொடுமையிலிருந்து தங்களைக் காப்பவர் ஒருவரும் இல்லையே என்று பாண்டி நாட்டுக் குடிகள் தத்தளித்தனர்.