பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிண தேவராயர்

மதுரையில் விஜயநகர அரசு

169

தொண்டை நாட்டைக் கைப்பற்றிய கம்பணவுடையார் மிகப் பெரிய படைகொண்டு மதுரையில் இருந்த முஸ்லிம்களைத் தாக்கினர். போர் கடுமையாக நடந்தது. முடிவில் முஸ்லிம் அரசு ஒழிந்தது. மதுரை, கம்பணர் கைப்பட்டது. அவ்வீரர் பாண்டிய நாட்டில் அமைதியை உண்டாக்கினார்; மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலைப் புதுப்பித்தார்; ஸ்ரீரங்கம் கோவிலை நன்நிலைக்குக் கொணர்ந்தார். இந்த இரண்டு பெருஞ் செயல்களால் அவ்வீரர் சைவர் வைணவர் நன்மதிப்பைப் பெற்றார். நாட்டில் அமைதி ஏற்பட்டதால் மக்கள் அவரைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றினர். திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அரங்கநாதர் சிலை மீட்டும் திருவரங்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது. நாட்டில் மூடப்பட்டு இருந்த கோவில்கள் திறக்கப்பட்டன. பூசை, விழாக்கள் முதலியன முன்போல நடைபெறத் தொடங்கின. கம்பணவுடையார் நாயக்கர் பலரைக் கோவில் நிருவாகத்தை மேற்பார்க்க நியமித்தார்; பாண்டிய நாட்டில் முஸ்லிம் அரசுக்கு அஞ்சி மறைந்திருந்த வீரபாண்டியன் என்பவனை மதுரைக்கு அரசனாக்கினார். இது பெருந்தன்மையான செயல் அன்றோ?

இலங்கை வெற்றி

கம்பணர் இலங்கையைக் கைப்பற்ற விரும்பினார்; பண்பட் தம் படைகளைப் பல கப்பல்களில் ஏற்றி வாழ்த்துரை கூறி அனுப்பினார். அவருடைய படைத்தலைவர்கள் வீரமிக்க இளைஞர்கள்; வெற்றி ஒன்றைத் தவிர வேறு அறியாதவர்கள்; ஆதலின் ஈழநாட்டை எளிதில் வெல்லலாம் என்று எண்ணினர். ஆயின், அவர்கள் அரும்பாடு பட்டே இலங்கையை வெல்ல வேண்டியவர் ஆயினர். இலங்கை இறைவன் விஜயநகர அரசுக்கு அடங்கி நடப்பதாக ஒப்புக் கொண்டான்; ஆண்டுதோறும் கப்பங் கட்டுவதாக இசைந்தான்.

தென்காசிப் பாண்டியர்

மாலிக் காபூர் படையெடுப்பினால் நிலைகுலைந்த பாண்டியருள் ஒரு கிளையினர் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள தென்காசி என்னும் நகரத்தில் தங்கிவிட்டனர். அவர்கள்