பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(176)

நகரப் பெருமக்கள்

அப்பாத்துரையம் 5

மண்டலேசுவரர் (மாகாணத் தலைவர்கள்), அமைச்சர், பிரபுக்கள், சேனைத்தலைவர் முதலியோர் அரையில் ஆடையும் உடம்பில் சட்டையும் தலையிற் பாகையும் அணிந்திருந்தனர். அவரவர் அலுவலுக்குத் தக்க ஆடை வேறுபாடுகள் இருந்தன. அவர்கள் பல்லக்கிற் செல்லும் உரிமை பெற்றிருந்தனர்.பிரபுக்கள் தங்கள் வருவாயைத் தாராளமாகச் செலவிட்டுப் போக பாக்கியங்களை அநுபவித்து வந்தனர். அவர்கள் இல்லங்கள் மாடமாளிகைகள். அவை திருமகள் திருவோலக்கம் கொண்ட இடங்களாகக் காட்சி அளித்தன.

கலை மகளிர்

விஜயநகரத்தில் இருந்த இசை-நடன-நாடகக் கலைகளை வளர்த்த மகளிர் அரசராலும் பொது மக்களாலும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டனர். அவர்கள் உயர்ந்த மாடமாளிகைகளில் வாழ்ந்து வந்தனர். பிரபுக்கள் முதலிய பெருமக்கள் அவர்கள் மாளிகைக்கட்குத் தாராளமாகச் சென்று வந்தனர். அஃது இழிவாகக் கருதப்படவில்லை. அம்மகளிர் அரண்மனையைச் சேர்ந்த பெண்மணிகட்கு ஆடல் பாடல்களைக் குஆ கற்பித்து வந்தனர்; தங்களுடைய ஆடல்-பாடல்களால் அரசரையும் அவையோரையும் அடிக்கடி மகிழ்வித்து வந்தனர்; ஆண்டு தோறும் மஹாநகமியன்று அரசர் முன்னர் மற்போர் புரிந்து பரிசு பல பெற்றனர். அவர்கள் அணிந்திருந்த அணிகள் விலைமதிப்புப் பெற்றவை. அவர்கள் தாம்பூலம் தரிப்பதில் பெருவிருப்பம் உடையவர்; தாம்பூலப் பட்டிகளைப் பலவகை யாக மடிப்பதில் பயிற்சிபெற்றவர். அரசரும் பிரபுக்களும் அவர்கட்கு நிலங்களை மானியமாக விட்டிருந்தனர். சுருங்கக் கூறின், கலை மகளிர் எல்லா நலன்களையும் பெற்று இனிதாக வாழ்ந்து வந்தனர் என்னலாம்.

மக்கள் வாழ்க்கை

விஜயநகரத்தில் எல்லாப் பொருள்களும் குறைந்த விலைக்குக் கிடைத்தன. மேனாட்டு யாத்ரிகர் ஒருவர், ‘ஒரு கோழியின் விலை அரையணா; ஆறு முதல் எட்டுக் கவுதாரியின்