கிருட்டிண தேவராயர்
185
பிரசாரம் செய்வித்தார்.இப்பிரசாரத்தால் நாட்டில் வாட்போர்ப் பயிற்சிக் கூடங்கள் தோன்றின. குடிகள் வாட்போர்ப் பயிற்சியில் ஊக்கம் காட்டினர். சிறந்த வாட்போர் வீரர்க்கு அரசர் அழகிய பெண்களைப் பரிசாக அளித்தனார். 'அச்சம் என்பது குடிகளிடம் இருத்தலாகாது. வீர வாழ்க்கையே வேண்டும்' என்று வீர நரசிம்மர் விரும்பினார். அவர் விருப்பம் ஓரளவு பயனளித்தது. ளைஞர்கள் வீரர்களாக விளங்கினர். அதனால் மூன்றுமுதல் நான்கு லக்ஷம் போர்வீரர் இராணுவத்திற் சேரலாயினர்.
வீர நரசிம்மர் குடிகளிடம் அன்புடையவர். அவர்கட்கு ஒரு குறைவும் ஏற்படலாகாது என்பது அவர் கருத்து. அவர் தம்மால் இயன்றவரை குடிகட்கு நம்மை செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்.
வீர நரசிம்மர் நரச நாயக்கரது முதல் மனைவியின் புத்திரர்; கிருஷ்ணதேவ ராயர் இரண்டாம் மனைவியான நாகலாதேவி குமாரர்; அச்சுத ராயரும் சீரங்கரும் மூன்றாம் மனைவியான ஓபாம்பாள் பிள்ளைகள். வீர நரசிம்மர்க்குப் பிறகு கி.பி.1509-இல் கிருஷ்ணதேவராயர் அரியணை ஏறினார். அவர் முடிசூடிக் கொண்ட நாள் கிருஷ்ண ஜயந்தி நாளாகும்.
அடிக்குறிப்பு
1.
8-8-1509