கிருட்டிண தேவராயர்
189
நகரமாக்கினார்; சாளுவ கோவிந்தராசர் என்பவரைக் கவர்னராக நியமித்தார்.
உதயகிரி முற்றுகை கலிங்கப்போர்
சாளுவ நரசிங்கரது ஆட்சி இறுதியில் கஜபதி கைப்பற்றிய உதயகிரி, கொண்டவீடு முதலிய இடங்கள் கிருஷ்ணதேவர் காலம் வரை விஜயநகர அரசர்களால் மீட்கப்படாமல் இருந்தன. கிருஷ்ண தேவராயர் அவற்றை மீட்க மனம்கொண்டார். அவர் கி.பி.1513-இல் உதயகிரிக் கோட்டையை முற்றுகையிட்டார். உதய கிரிக்கோட்டை எளிதில் கைப்பற்றப்படாதது ஆதலின் முற்றுகை ஒன்றரையாண்டு நீடித்தது. இராயர் மலைப் பாதைகளை அகலமாக்கினார்; பாறைகளை உடைத்து வழிகளை உண்டாக்கினார்; கோட்டையை நெருங்கி வளைத்துக் கொண்டார். அப்பொழுது கோட்டைக்குள் இருந்தவர் கஜபதியின் சிறிய தகப்பனாராவர். அவர் கோட்டையை விட்டு வெளிவரவில்லை.
உதயகிரி ஒன்றரை வருடகாலமாக முற்றுகையிடப்பட்டு இருப்பதைக் கேள்வியுற்ற கஜபதி பெரும்படையுடன் உதயகிரியை நோக்கி வந்தான். அதனை அறிந்த இராயர் தம் சேனையின் பெரும் பகுதியை அழைத்துக் கொண்டு எதிர் சென்று கஜபதியைத் தாக்கினார். போர் கடுமையாக நடைபெற்றது. இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. இறுதியில் கஜபதி அரசன் தோற்றோடினான். இராயர் மீட்டும் உதயகிரியை அடைந்தார்; உள்ளேயுள்ள தலைவன் தலைமீது தம் பாதத்தை வைக்கும் வரை தாம் நீராடி உணவு கொள்வதில்லை என்று சபதம் செய்தார். இதனை அறிந்த கோட்டைத் தலைவர் தமது முடியை அனுப்பு அதன்மீது இராயர் பாதத்தை வைத்துத் தமது உயிரைக் காக்குமாறு வேண்டினார். இராயர் அங்ஙனமே செய்து கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார்; கொண்டமரசையன் என்பனைக் கவர்னராக நியமித்தார்.
பின்னர் இராயர் தம் மனைவியாரான திருமல தேவி, சின்னாதேவி என்பவருடன் திருவேங்கடத்தை அடைந்தார்; நின்ற கோலத்தில் அங்கு உள்ள நீலவண்ண நெடியோனை - தம் குல தெய்வமான வேங்கடப் பெருமானை மனமார வாழ்த்தி