192
அப்பாத்துரையம் – 5
வாளேந்திப் போரிட்டார். பகைவர் சேனையாகிய கடலில் ராயர் என்னும் மரக்கலம் தடையின்றிச் சென்று மீண்டது. முடிவில் பகைவர் சிதறிக் கலிங்கம் நோக்கி ஓடினர்.
இராயர் பெருவெற்றியுடன் கொண்டபல்லிக்குத் திரும்பினார்; வெற்றியால் மனக்களிப்புற்ற படைவீரர் முற்றுகையை நெருக்கினர். இரண்டு மாதங்கட்குப் பிறகு கோட்டை இராயர் வசப்பட்ட ராயர் வசப்பட்டது. கோட்டைத் தலைவனும்
பிறரும் சிறைப்பட்டனர்.
கொண்டபல்லி வெற்றிக்குப் பிறகு பல கோட்டைகள்
பிடிபட்டன.
இராயர் கோதாவரிக்கு வடக்கேயுள்ள சிம்மாத்ரியை நோக்கிப் புறப்பட்டார்.அப்பொழுது அப்பாஜியும் பிற தானைத் தலைவரும், “நாம் கஜபதி நாட்டிற்குள் போகும் பொழுது வழியில் மேற்குப் பக்கத்திலிருந்து முஸ்லிம்களின் தாக்குதல் ஏற்படின் துன்பம் மிகுதிப்படும். அதே சமயத்தில் கஜபதியும் வடக்கிலிருந்து நம்மைத் தாக்கினால், நாம் தோல்வி அடைய வேண்டியவராவோம். ஆதலின் திரும்பி விடுதலே நல்லது” என்றனர். இராயர் அதற்கு இசையவில்லை; “கஜபதியின் செருக்கை அடக்குதலே நல்லது. அவன் நமது நாட்டின் பல பகுதிகளை நீண்டகாலமாகப் பிடித்து ஆளவில்லையா? அந்த அவமானத்தைப் போக அவன் நாட்டைத் தாக்கி அவனைப் பணியவையாவிடில் நமது பெருமை என்னாம்?" என்றனர். அனைவரும் 'சரி' என்று ஒப்பு கொண்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டனர்.
வழியில் பொட்னூர்க்குத் தெற்கே மலைக் கணவாயைத் தாண்டிச் செல்ல முயன்றபொழுது முஸ்லிம் தளகர்த்தர் ஒருவர் அறுபதினாயிரம் குதிரை வீரருடன் தாக்கினர். எதிர்பாராத இத்தாக்குதலால் இராயர்படை நிலைகுலைந்தது. ஆயினும் இராயரது பண்பட்ட குதிரைப் படைவீரர்கள் கணவாயின் இரண்டு பகுதிகளிலும் மலைமீதேறிப் பகைவர் படையைத் தாக்கத் தொடங்கினர். அதனால் பகைவர் இருபுறத் தாக்குதலுக்கு உட்பட்டு நிலைகலங்கி ஓடினர். இராயர் அக்கணவாயைக் காக்க முப்பதினாயிரம் வீரரை விட்டு, சிம்மாத்ரியை நோக்கிச் சென்றனர். வழியில் இருந்த ஊர்கள் பாழாயின. சிம்மாத்ரியில் இராயரது வெற்றித் தூண் நடப்பட்டது.