194
இராயச்சூர்ப் போர்
அப்பாத்துரையம் 5
கிருஷ்ணதேவராயர் மேற்சொன்ன போர்களில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பிஜாப்பூர்ச் சுல்தான் இராயர் பிடித்திருந்த இராயச்சூரைத் தம் வசப்படுத்திக் கொண்டார். மேற்சொன்ன கலிங்கப் போரை முடித்துக் கொண்ட இராயர் 1520-இல் இராயச்சூரைத் தாக்கினார்; பிஜாப்பூர்ச் சுல்தானைப் போரில் முறியடித்து, இராயச்சூரைக் கைப்பற்றினார்.
குல்பர்க்கா மீது படையெடுப்பு
இராயருடன் சமாதானம் வேண்டிய பிஜாப்பூர்ச் சுல்தான் 1523-இல் தூதுவர் ஒருவரை அனுப்பினார்; குறித்த நாளில் எல்லைப்புறத்தில் இராயரும் சுல்தானும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயின், குறித்த இடத்தில் இராயர் ஒருவரே சென்றிருந்தார்; சுல்தான் வரவில்லை. அதனாற் சீற்றங்கொண்ட இராயர் பிஜாப்பூர் நாட்டின்மீது படையெடுத்தார்; கிருஷ்ணையாற்றைத் தாண்டிப் பல கோட்டைகளைக் கைப்பற்றினார்; பல உயிர்கள் தீக்கிரையாயின. வன்மை மிகுந்த குல்பர்க்கா கோட்டையும் பிடிபட்டது. அக்கோட்டைக்குள் பழைய பாமினி அரச மரபைச் சேர்ந்த அரசகுமாரர் மூவர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இராயர் அவர்களை விடுதலை செய்து சிறப்பு முறையில் நடத்தினார்; அவருள் மூத்தவரை அரசராக்கி ளைஞர் இருவரையும் விஜயநகரம் கொண்டு சென்றார்; அவர்களை மிக்க மரியாதையுடன் நடத்திவந்தார்.
பெருவீரர்
இங்ஙனம் கிருஷ்ணதேவராயர் பட்டமேற்ற நாள்முதல் 1523-வரை பல போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்; தம் முன்னோர்களால் அடக்க முடியாதிருந்த கஜபதியை அடக்கி அடிபணிய வைத்தார்; சுல்தான்களைப் பல போர்களில் வென்று அடக்கினார்; தம் பெருநாட்டைப் பலம் மிகுந்ததாகச் செய்தார். தமது படைப் பெருக்கத்தால் எதிரிகளை நடுங்க வைத்தார். போர் வீரர்களை நாள்தோறும் சந்தித்துப் பேசினார்; காயம் பட்டவர்கட்கு உடனுக்குடன் உதவியளித்து வந்தார்; போரில் இறந்த வீரர் குடும்பங்கட்கு அரசாங்க உதவி அளித்தார்.போரில்