200
அப்பாத்துரையம் - 5
அச்சூழ்ச்சியை முன்னர் அறிந்த அப்பாஜியின் தந்திரத்தால் இராயர் உயிர் தப்பினார்' என்று செவிவழிச் செய்தி செப்புகிறது.
ன்ன பிற காரணங்களால் அவள் வாழ்க்கையை வெறுத்தாள்; துறவுபூண்டாள்; சுடப்பை ஜில்லாவில் உள்ள கம்பம் என்னும் இடத்தில் ஓர் ஏரியை உண்டாக்கினாள்; அதன் கரையில் ஓர் ஆசிரமத்தை அமைத்து அதனில் வாழ்ந்துவந்தாள். அவள் சிறந்த வடமொழிப் புலமை உடையவள்; தன் கணவர் தன்னைத் துறந்தமைக்காக வருந்தி, வடமொழியில் ஐந்து செய்யுட்களைப் பாடினாள். அது ‘துக்கா-பஞ்சகம்' எனப்படும்.
இராயருக்குத் திருமலைராயன் என்ற மகன் இருந்தான். ஆனால் அவன் இளமையிலேயே இறந்துவிட்டதால், இராயருக்கு இளவலான அச்சுதராயர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறகு பட்டம் பெற்றார். இராயருக்குப் பெண்மக்கள் இருவர் இருந்தனர். அவர்கள் திருமலாம்பாள், வெங்கலாம்பாள் என்பவராவர். அவர்கள் அரசமரபினரான 'ஆரவீடு' இராமராயர் என்பவரையும் அவர் தம்பியார் திருமலைராயர் என்பவரையும் மணம் செய்து கொண்டனர். 'இராயருக்குப் புலமை மிக்க மற்றொரு மகளும் இருந்தாள். அவள் பெயர் மோஹனாங்கி என்பது.அவள் ‘மாரீசீ பரிணயம்' என்னும் நூலை எழுதினாள் என்று செவிவழிச் செய்தி செப்புகிறது.
இராயர் புலமை
"
கிருஷ்ணதேவராயர் வடமொழியிலும் தெலுங்கிலும் நல்ல புலமை உடையவர்; ‘ஆமுக்தமால்யதா' என்னும் நூலைத் தெலுங்கில் பாடியுள்ளார். அஃது ஆண்டாள் வரலாற்றை விரித்துரைப்பது. அவர் வடமொழியில் சில நூல்கள் செய்திருப்பதாக ஆமுக்தமால்யதாவில் கூறப்பட்டுள்ளது. ஜாம்பவதீ கல்யாணம் என்னும் நூல் இப்பொழுது கையெழுத்து நூல் வடிவில் ‘கையெழுத்து நூல் நிலையத்’தில் இருக்கின்றது. கிருஷ்ண தேவராயர் ‘பண்டித சோழன்' என்ற இராஜேந்திர சோழனைப் போலப் பெரும் புலமை படைத்தவர். போஜன் வடமொழியை வளர்த்தவாறு கிருஷ்ணதேவ ராயர் தெலுங்கு மொழியை வளப்படுத்தினார்; அதனால் 'ஆந்திர போஜன்' என்ற புகழ்ப் பெயரைப் பெற்றார். அவர் முல் அமைச்சரான அப்பாஜி,