பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிண தேவராயர்

(201

அகத்தியர் என்பவர் வரைந்த சம்பு பாரதத்திற்கு உரை வகுத்த பெரியார் ஆவர்.

அவைப் புலவர்

இராயரது அவைப்புலவர் எண்மர். அவர்கள் (1) அல்லஸானி பெத்தன்னா, (2) நந்தி திம்மன்னா, (3) இளையராஜு ராமபத்திரன், (4) துர்ச்சடி, (5) மாதய்யகாரி மல்லன்னா, (6) பிங்கள சூரன்னா, (7) பூஷணன், (8) தெனாலி இராமகிருஷ்ணன் என்பவர். அந்த எண்மரும் ‘அட்ட கஜங்கள்' எனப் பெயர் பெற்றிருந்தனர். புலவர் எண்மருள் அல்லஸானி பெத்தன்னா என்பவரே முதன்மையானவர். இராயர் இப் புலவரிடம் கொண்டிருந்த மதிப்புக் கூறுந்தரத்ததன்று. இராயர் புலவரது பல்லக்கைத் தம் தோளில் தூக்கி மகிழ்வர் - அவருக்குத் தம் கைகளால் தங்கத் தோடாவை அணிவித்து மகிழ்வர்தாம் செல்லும் எல்லா இடங்கட்கும் அவரை அழைத்தேகுவர் எனின், அம்மம்ம! அரசர் பெருமான் புலவர் பெருமானிடம் காட்டிய பெருமதிப்பை என்னென்பது! பெத்தன்னா வரைந்த மனுசரித்திரம், பாரிஜாதாபஹரணம் என்ற நூல்கள் கிருஷ்ண தேவராயருக்கு உரிமையாக்கப் பட்டன. கிருஷ்ணதேவராயர் புலவர்களைத் தம் உயிரைப் போல எண்ணிப் பாதுகாத்தார்; அவர்கட்கு எல்லாப் போக பாக்கியங்களையும் வழங்கினார்; புலவர்கள் யானைமீதும் பல்லக்கிலும் வருவதைக் கண்டு மகிழும் பெருங்குணம் பெற்றிருந்தார்; அவர்கள் யானைமீதிருந்து இறங்கும் பொழுது கைலாகு கொடுத்து அவர்களை இறக்கி மரியாதை செய்யும் அருங்குணம் வாய்ந்து விளங்கினார்.

சமயநிலை

இராயரது சமயம் வைணவம். அவருக்கு விருப்பமான கடவுள் வேங்கடமலையில் எழுந்தருளியுள்ள திருமாலேயாவர். அவருடைய செப்புச் சிலையும் அவர் மனைவியர் இருவருடைய செப்புச் சிலைகளும் திருப்பதிக் கோவிலில் இன்றளவும் இருந்து வருதல் இதனை மெய்ப்பிக்கும். புக்கராயர் போன்ற பேரரசரைப் போலவே வடக்கே சிம்மாசலத்திலிருந்து தெற்கே இராமேசுவரம் வரையில் உள்ள பெருங் கோவில்களில் இராயர் செய்த திருப்பணிகளைக் காணலாம். விஜய நகரத்தில் கிருஷ்ணன்