சங்க காலப் புலவர்கள்
5
துறைமுகப் பட்டினங்களாக இருந்தன. மல்லை சிறந்த துறைமுக நகரமாக இருந்தது.அங்கு மாட மாளிகைகள் இருந்தன; கப்பல்கள் வந்து தங்குவதற்கேற்ற துறைமுகம் செவ்வையாக அமைந்திருந்தது. மேற்கு நாடுகளிலிருந்து குதிரைகள் வந்து இறங்கின. இத்தொண்டை நாடு சங்க கால முதலே இருபத்து நான்கு கோட்டங்களாகப் பகுக்கப்பட்டிருந்தது.
இருபத்து நான்கு கோட்டங்கள்
1. புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவிற் கோட்டம் 4. செங்காட்டுக் கோட்டம் 5. பையூர்க் கோட்டம் 6. எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 9. களத்தூர்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம் 17. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 13. பல்குன்றக் கோட்டம் 14. இலங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16. செங்கரைக் கோட்டம் 17. படுவூர்க் கோட்டம் 18. கடிகூர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 20. குன்றவட்டானக் கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேத்தூர்க் கோட்டம் 24. புலியூர்க் கோட்டம்.
சோழர் ஆட்சி
•
கி.பி. முதல் நூற்றாண்டில் தொண்டை நாட்டைக் கரிகாற் சோழன் கைப்பற்றினான் என்று நூல்கள் கூறுகின்றன. மேலும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொண்டை நாடு சோழர் ஆட்சியில் இருந்தது என்பதை மணிமேகலை என்னும் நூலால் அறிகிறோம். அப்பொழுது அரசனாக இருந்தவன் சோழன் நெடுமுடிக்கிள்ளி என்பவன். அவன் தம்பியான இளங்கிள்ளி என்பவன் தொண்டை நாட்டைச் சோழர் பிரதிநிதியாக இருந்து அரசாண்டான். தொண்டை நாடு முதலில் தனித்திருந்தது; பின்னர்ச் சோழர் ஆட்சிக்கு உட்பட்டது என்பது தெரிகிறது.
நடுநாடு
இது பாலாற்றுக்கும் சிதம்பரத்திற்கும் வடக்கே பாயும் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட நாடாகும். இதனில் கெடிலம், தென்பெண்ணையாறுகள் பாய்கின்றன. இதனைச் சிறப்புற