கிருட்டிண தேவராயர்
207
2. இராயருடைய முதல் அமைச்சரான அப்பாஜி சிறந்த வடமொழிப் புலவர். அவர் அகத்தியர் என்பார் வரைந்த பால பாரதத்திற்கு உரை எழுதியுள்ளார். அந்த உரை ‘மனோரமா’ எனப் பெயர்பெறும்.
3. நாதிண்ட்ல கோபமந்திரி என்பவர் கொண்ட வீட்டில் இருந்த அரசப் பிரதிநிதி. அவர் அப்பாஜிக்கு நெருங்கிய உறவினர். அவர் பிரபோத சந்திரோதயம் என்னும் வடமொழி நூலுக்கு உரை வகுத்தவர். அந்த உரையின் பெயர் 'சந்திரிகா' என்பது. அந்த உரை கோப மந்திரியின் கல்வி ஆழத்தைக் கவினுறக் காட்டுவது. அவர் தெலுங்கில் 'கிருஷ்ணர்ச்சுன சம்வாதம்' என்ற ஒரு நூலையும் எழுதியுள்ளார்.
46
4. கோபமந்திரிக்கு அமைச்சராக இருந்தவர் யுச தேசா என்பவர். இவர் முன்சொன்ன லக்ஷ்மீதரர் மாணவர். இப்பெரியார் 4'சிவபஞ்ச ஸ்தவம்' என்ற ஐந்து நூல்கட்கு உரை வரைந்துள்ளார். தெனாலி இராமலிங்கர் இவரிடம் மிக்க மதிப்புடையவர். அவர் தாம் செய்த ‘உத்பட ஆராத்ய சரித்திரம்' என்னும் தெலுங்கு நூலை இவருக்கு உரிமையாக்கினார் எனின், இந்த அமைச்சருடைய புலமையும் புலவரை ஆதரிக்கும் தன்மையும் நன்கு விளங்கும்.
இந்த அமைச்சருடைய புத்திரர் சங்கர் கவி என்பவர், அவர் சிறந்த தெலுங்குப் புலவர். அவர் ‘அரிச்சந்திர உபாக்கியாநம்' என்னும் நூலைத் தெலுங்கில் பாடியுள்ளார்.
5. பந்தம் லக்ஷ்மி நாராயணர் என்பவர் ஒரு வடமொழிப் புலவர். அவர் கிருஷ்ணதேவராயர் அவையில் நாட்டியப் புலவராக இருந்தவர். அவர் அபிநவ பரதாசாரியர், சூக்கும பரதாசாரியர் முதலிய பட்டப்பெயர்களைப் பெற்றவர். இராயர் அவருக்கு யானை, தங்கப் பல்லக்கு, வெண் முத்துக் குடைகள் இரண்டு, வாத்தியங்கள் முதலிய அரச மரியாதைகளை அளித்தனர். அப்புலவர் ‘சங்கீத சூரியோதயம்' என்னும் சைநூல் ஒன்றை ஐந்து அதிகாரங்களில் வரைந்துள்ளார்; அதனைக் கிருஷ்ணதேவராயர்க்கு உரிமையாக்கியுள்ளார்.
6.ஈசுவர தீக்ஷிதர் என்பவர் இராயர் அவைப்புலவருள் ஒருவர். அவர் இராயர் தூண்டுதலால் வால்மீகி ராமாயணத்துக்குச் சிற்றுரை எழுதினர். அவர் வால்மீகி ராமாயணம் முழுவதும்