பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் – 5

210 ||. புருஷோதயம், பிரபாவதி-பிரத்யும்னம் என்பன. இவை பிற்காலத் தெலுங்குப் புலவரால் நன்கு போற்றப்பட்டவை.

7. இராமராஜ பூஷணர்-இவரும் இராயருக்குப் பிறகே நூல் செய்தவர். இவர் செய்த 'வசு சரித்திரம்' புகழ்பெற்றது. அது காளத்திக் கவிஞர் என்பவரால் வடமொழியில் பெயர்த்து எழுதப்பட்டது.எனின், அதன் சிறப்பை நன்கறியலாம் அன்றோ?

8. தெனாலி-இராமலிங்கர்-இவர் பிராமணர்; முதலில் சைவராக இருந்தவர்; பின்னர் வைணவராக மாறித் தெனாலி - இராமகிருஷ்ணர் எனப்பெயர் பெற்றார். இவர் ஏறத்தாழக் கி.பி. 1530-இல் ‘உத்படாராத்ய சரித்திரம்' வரைந்தனர். இவருக்குக் குமாரபாரதி என்ற பெயரும் உண்டு. இவர் பிறகு 'பாண்டுரங்க மஹாத்மியம்', 'கடிகாசல மஹாத்மியம்' என்றும் நூல்களை (1560-70) எழுதினார். இவர் ‘கந்தர்ப்பகேது விலாசம்' என்னும் நூலையும் வரைந்தார்.

தெனாலிராமன் கதைகள்

இக்கதைகள் எல்லாம் இப்புலவரைப் பற்றியனவே ஆகும். இவர் சிறந்த புலவர்; அதே சமயத்தில் சிறந்த விகடராகவும் இருந்தவர். இவரைப் பற்றிய கதைகள் எந்த அளவு உண்மையானவை என்பதை உறுதியாக உரைத்தல் இயலாது; ஆயினும் அவை நாட்டில் வேரூன்றி விட்டன; வழிவழியாகத் தென் இந்திய மக்கள் அக்கதைகளைக் கேட்டுத் திளைத்து வருகின்றனர்.

9. கந்துகூர்-ருத்ர கவி-இவர் பொற்கொல்லர் வகுப்பினார்; பன்னிரண்டு ஆண்டுகள் கிருஷ்ணதேவராயர் அவையில் இருந்தவர். இவர் 'நிரன் குசோபாக்கியாநம்' என்னும் சிறந்த பிரபந்தத்தையும், சுக்கிரீவ விஜயம், யக்ஷகான்ம், ஹரிசதகம் என்னும் நூல்களையும் இயற்றியவர்.

10. தல்லபாக பெத்த திருமலய்யா-இவர் திருப்பதியைச் சேர்ந்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் வழிபடு கடவுளான வேங்கடேசப் பெருமாள்மீது பல சங்கீர்த்தனங்களைப் பாடியவர்; ஹரிவம்சம், சிருங்கார சதகம், நீதி சதகம், வெங்கடேசுவரோத் தாரணம் முதலிய நூல்களை வரைந்தவர்; பகவத்கீதைக்கு உரை எழுதியவர். இவரது நீதி சதகம் கிருஷ்ண தேவராயரால் மிகவும்