கிருட்டிண தேவராயர்
(211
பாராட்டப்பட்டதாகும். இப்புலவர் யாப்பிலக்கணம் நூல் ஒன்றையும் செய்தனர்.
11. தல்லபாக சின்னன்னா-இவர் மேற்சொன்ன புலவர் புத்திரர். இவரது பெயர் திருவேங்கடநாதன் என்பது. இவர் பரமயோகி விலாசம். அஷ்டமஹிஷி கல்யாணம் என்னும் நூல்களை எழுதியுள்ளார்.
12. சிந்தல்பூடி எல்ல கவி-இவர் பொட்நூரைச் சேர்ந்தவர். அவ்விடம் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு உட்பட்ட பொழுது இவர் விஜயநகரத்திற்கு வந்து சேர்ந்தனர். இராயர் இவரதுகவிதா வன்மையைச் சோதித்து அறிந்தனர்; இவர் இயற்றிய ‘இராதா மாதவம்' என்ற நூலைப் பாராட்டி, இவர்க்கே ‘இராதாமாதவம்’ என்ற பட்டம் அளித்தார். இவர் இராயர் காலமான பின்னர் விஷ்ணூமய நாடகம்', 'தாரசு பிரமராஜியம்' என்பவற்றை எழுதினார்; கடைசி நூலை அச்சுதராயரிடம் படைக் கணக்கு களைப் பார்த்துவந்த அதிகாரி ஒருவர்க்கு உரிமையாக்கினார்.
13. வல்லபாசாரியார்-இவர் கவிதேவிந்திரர் எனவும் அழைக்கப் பட்டனர். பாஸ்கராச்சாரியர் வடமொழியில் வரைந்த லீலாவதி என்ற நூலை இப்புலவர் தெலுங்கில் மொழி பெயர்த்தார்; அதனைக் கிருஷ்ணதேவராயர் நம்பிக்கைக்கு உ உரிய பிரபுவான பொம்மலதகாளர் என்பவர்க்கு உரிமையாக்கினர்.
14. குமார மல்லம்மாள்-இவர் ஒரு பெண்பாற் புலவர்; தெலுங்கு மொழியில் சிறந்த புலமை உடையவர். இவர் ஒருவரே கிருஷ்ணதேவராயர் காலத்துத் தெலுங்குப் பெண்பாற் புலவர். இவர் இராமாயணத்தைத் தெலுங்கில் பாடியுள்ளார். கிருஷ்ண தேவராயர் இவருக்கும் பலவகைப் பரிசுகள் அளித்து மகிழ்வித்தார்.
15. வேறு புலவர்கள்-கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவரால் ஆதரிக்கப்படாத புலவர் சிலர் இருந்தனர். அவருள் எடபாட்டி எர்ரன்னா என்பவரும், சங்குசல நரசிமம் கவி என்பவரும் குறிக்கத்தக்கவர் ஆவர். இவருள் முன்னவர் குமாரநைஷதம், மல்ஹண சரித்திரம் என்னும் இரு நூல்களை எழுதியவர்; பின்னவர் கவிகர்ண ரசாயனம் என்ற நூலை வரைந்தவர்.