பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(212)

அப்பாத்துரையம் - 5

கன்னடப் புலவர்

கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் கன்னடம் ஓரளவு சிறப்புற்றது. புலவர் பலர் அவர் காலத்தில் இருந்து பல நூல்களைச் செய்தனர். அவருள் சிலரைப்பற்றி ஈண்டுக் காண்க:

1. திம்மன்னா-இவர் பானுகவி என்பவர் மகனார் ஆவர். பானுகவி என்பவர் கன்னட மொழியில் மிகப் பெரும்புலவர். திம்மன்னா கன்னட மஹாபாரதத்தை முடித்துக் கிருஷ்ண தேவராயர்க்கு உரிமையாக்கி மதிப்புப்பெற்றவர்.

2.வியாசராயர்-இவர் வியாச தீர்த்தர் என்றும் அழைக்கப் பட்டனர்; ‘மாத்வமுனிவர்' எனப் பெயர் பெற்றவர்; வியாசராய மடத்தை உண்டாக்கியவர். இவர் வடமொழியில் தர்க்க தாண்டவம், நியாயமிருதம், தாத்பரிய சங்கிரகம் என்ற நூல்களை எழுதினவர்; கன்னடத்தில் பல கீர்த்தனங்களைப் பாடினவர். கிருஷ்ணதேவராயர் இவரைப் பெரிதும் மதித்து வந்தார்.

3.

புரந்தரதாசர்-இவர்

வியாசராயர் மாணவர்;

வர்

கன்னடத்தில் சிறந்த எழுத்தாளர்; சிறந்த பாடகர்; பண்டரிபுரத்தில் வாழ்ந்தவர். இவருடைய பாடல்கள் கன்னட மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.

4. கனகதாசர்-இவர் தார்வார் ஜில்லாவைச் சேர்ந்தவர்; சிறந்த புலவர். இவர் மோஹன தரங்கிணி, நளசரித்திரம், ஹரிபக்தசாரம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

5.வித்யானந்தர்-இவர் 'அபிநவவாதி வித்யானந்தர்' என்றும் பெயர் பெற்றவர். இவர் 'காவியசாரம்' என்னும் தொகுப்பு நூல் செய்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகரத்தில் இருந்த சமணர் ஆவர்.

6. மல்லனார்யா-இவர் குப்பி என்ற ஊரினர்; சைவர்; கிருஷ்ண தேவராயர் காலத்தவர். இப்புலவர் 'பவசிந்தா ரத்தினம்’, ‘வீரசைவாமிருதம்' என்னும் நூல்களைச் செய்தவர்.

7. சாட்டு விட்டலநாதர்-இவர் பாகவத புராணத்தைக் கன்னடத்தில் வரைந்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்திலும் அச்சுதராயர் காலத்திலும் வாழ்ந்திருந்தவர்.