கிருட்டிண தேவராயர்
215
ரண்டினையும் சீர்தூக்கி, வைணவ சமயத்தின் சிறப்பியல்பு களைத் தம்முன் பேசிக்கொள்வதாக அமைந்திருப்பது. இந்த நூல் நான்கு காண்டங்கள், இருபத்தாறு படலங்கள், நூற்றுமுப்பது பரிச்சேதங்கள், 2119 விருத்தங்கள் உடையது. இது கருமாணிக்க து வண்ணரது திருமுன்பு அரங்கேற்றப்பட்டது. அரிதாசர் இந்த நூலில் கிருஷ்ணதேவராயரைப் பாராட்டியுள்ளார்.
“கிரிபோல் விளங்கிக் கிளரும் புயக்கிட்ண ராயன் தரைமீது சிங்காத் திரியில் செய்த்தம்பம் நாட்ட வரமா தரவால் அளித்தே வடகூவம் மேயும் கருமா மணிவண் ணனைநீ டுகருத்தில் வைப்பாம்.'
4. தத்துவப்பிரகாச- இவர் திருவாரூர்த் தியாகராஜப் பெருமானது கோவில் கண்காணிப்பாளர்; கிருஷ்ணதேவராயர் காலத்தவர். கோவில் அர்ச்சகரான வீழிப் பிராமணர் கோவிற்- காரியங்களைச் செவ்வனே நடத்தவில்லை. விழாக் காலத்தில் செய்யப்பட வேண்டியன செய்யப் படவில்லை. இக்குறைகளைக் கண்ட தத்துவப் பிரகாசர் பெருமான் மீதும் அரசன் மீதும் ஆணையிட்டுக்கொடியிறக்காமற் செய்தார், இதனை,
“மருவுபுகழ்க் கிட்ண மாராயர் ஆணை அரிய வடமலையான் ஆணை - திருவாரூர்ப் பாகற் கொடியறுப்பார்' பாதந் திருவாணை தியாகக் கொடியிறக்காதே”
என்று அவர் பாடிய செய்யுள் வலியுறுத்தும். பின்னர் அவர் நடந்த தவறுகளை எல்லாம் கிருஷ்ணதேவராயருக்கு வெண்பா மூலம் தெரிவித்தார். இதனை,
“ஊழித் துலுக்கல்ல ஒட்டியான் தானுமல்ல
8
வீழித் துலுக்கு வந்து மேலிட்டு - வாழி
சிறந்ததிரு வாரூர்த் தியாகருடை பூசை
இறந்ததே கிருட்டினரா யா'
99
என்னும் வெண்பா உறுதிப்படுத்தல் காண்க.