பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிண தேவராயர்

219

சுவர்களிலும் பிற கட்டடச் சுவர்களிலும் உள்ள சிவப்புமஞ்சள் நிற ரேகைகளைக் கொண்டு உணரலாம். கோவில் மண்டப மேல் கூரையில் காணப்படும் பலவகைச் சிற்பங்கள் நிறம் தீட்டப் பெற்றவையாகக் காண்கின்றன. அரசர் சென்று அரச காரியங்களைக் கவனிக்கும் பெரிய கட்டடம் முழுவதும் திரைச் சீலைகளால் அலங்கரிக்கப் பட்டது. சுவர்கள் மிக்க அழகான ஓவியங்களைக்கொண்டவை. அக்கட்டடத்தின் நாற்புறங்களிலும் வாயில்கள் உண்டு. ஒவ்வொரு வாயிலிலும் அழகிய மாதர்

ருவர் ஓவியங்கள் காண்கின்றன. அரண்மனை மாதர்கள் நடனம் பயில்வதற்கு உரிய அரங்கின் சுவர்களில் பலவகை நடன நிலைகளைக் குறிக்கும் ஓவியங்கள் அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. யானைகள், குதிரைகள் இவற்றின் மீது போடப்பட்ட உயர்வகைத் துணிகள் சிறந்த சித்திர வேலைப்பாடு கொண்டவை. யானைகளின் தலைமீது அரக்கர் முகங்களும், புலி, சிங்கம் முதலிய பெரிய விலங்கு உருவங்களும் தீட்டப்பட்டிருக்கும்.

'இராயர் இருப்பிடத்திற்குச் செல்லும் வழியை உணர்த்தும் வாயிலின் இருபுறங்களிலும் இரண்டு உருவச் சிலைகள் இருக்கின்றன. அவை பல நிறங்களால் அழகு பெறத் தீட்டப் பட்டுள்ளன. வலப்புறம் இருப்பது கிருஷ்ணதேவ ராயர் தகப்பனாரான நரசநாயக்கர் உருவச்சிலை. அவர் சிறிது கறுப்பு நிறம் நல்ல உடற்கட்டு-அழகிய தோற்றம் உடையவர் என்பனவற்றை அச்சிலையைக் கொண்டு நன்கறியலாம். இடப்புறம் இருப்பது கிருஷ்ணதேவராயருடைய உருவச்சிலை. அஃது அழகிய தோற்றமும் உடற்கட்டும் நடுத்தர உயரமும் கம்பீரமான பார்வையும் கூடியதாய்க் காண்கின்றது.'

இவ்வாறு உருவச்சிலைகள் அமைத்தல் விஜயநகர அரசர்க்குப் பழக்கமானதேயாகும். விஜயநகரத்தில் உள்ள அச்சுதராயர் கோவில் திருச்சுற்றில் ஓர் அரசன், அரசி உருவச் சிலைகள் அழகிய அமைப்பில் இன்றும் காணக் கிடைக்கின்றன. திருப்பதியில் உள்ள கிருஷ்ண தேவராயர், அவர் மனைவியர் இருவர் உருவச்சிலைகளும் இப்பழக்கத்தை மெய்ப்பிக்கின்றன. பேரரசர் பழக்கத்தை அவருடைய சிற்றரசரும் பின்பற்றினர் என்பதை, மதுரை மீனாஷியம்மன் கோவிலில் உள்ள திருமலை நாயக்கர் உருவச்சிலையைக் கொண்டு அறியலாம்.